சிக்கிம் மாநிலம் காங்க்டாக் மாவட்டத்தில் எல்லையோரம் அமைந்துள்ள கிராமங்களில் கரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கில் ஓட்டும் பயணம் இன்று (அக்.18) தொடங்கப்பட்டது. இதனை பெகாங் தளத்திலிருந்து சிக்கிம் கலாசார, சாலை மற்றும் பாலங்கள் துறை அமைச்சர் சம்துப் லெப்சா கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
சுமாராக 218 கி.மீ பயணத்தை 20 நாள்களில் கடந்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய-திபெத்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியை அமைச்சர் சம்துப் லெப்சா பாராட்டியுள்ளார்.
இந்தக் குழு கரோனா தொடர்பான பிரச்னைகள் குறித்து எல்லை கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மருத்துவ மற்றும் கால்நடை முகாம்களை ஏற்படுத்தவுள்ளது.
கரோனா தடுப்பு தொடர்புடைய சுகாதாரப் பொருள்களையும் வழங்கவிருக்கிறது. தவிர, இந்திய-திபெத்திய எல்லை காவல் படையில் ஆட்சேர்ப்பு குறித்த தகவலையும் இக்குழு பரப்புகிறது.
இந்திய-திபெத்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த 18 பேர் இந்த விழிப்புணர்வு பயணத்தில் கலந்துகொள்கின்றனர்.
இதையும் படிங்க: காவல் துறை சார்பில் ஆடல் பாடல் வடிவில் கரோனா விழிப்புணர்வு