கரோனா நோய்த்தொற்று குறித்து ஆராய்ச்சி செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழுவுடன் இணைந்து செயல்பட இஸ்ரேலின் வெளியுறவு, சுகாதார அமைச்சகங்களின் குழு இந்தியா வந்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் நேற்று (ஜூலை26) வெளியிட்ட பதிவில், “எங்களது வெளியுறவு சுகாதாரத்துறை குழு இந்தியாவிற்கு சென்று கொண்டிருக்கிறது. அங்கு சென்றபின் இந்தியக் குழுவுடன் இணைந்து கரோனா தொற்றுக்கான பரிசோதனையில் இணைந்து செயல்படும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் கரோனா தொற்று பரிசோதனைக் கருவி குறித்து ஆய்வு மேற்கொள்ள இஸ்ரேலிலிருந்து குழு ஒன்று வருவதாக ஜூலை 24ஆம் தேதி இஸ்ரேல் தூதரகம் தெரிவித்திருந்தது.
முதல்கட்ட சோதனை எய்ம்ஸ் மருத்துவ குழுவுடன் இணைந்து ஏற்கனவே இஸ்ரேலில் நடைபெற்று விட்டது. தற்போது கடைசிகட்ட ஆய்வானது இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது என இஸ்ரேல் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : வெள்ளத்தின் மத்தியில் நற்செய்தி - இனப்பெருக்கத்தில் புலிகள்!