ETV Bharat / bharat

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி பெங்களூரில் கைது - பெங்களூரு பாதுகாப்பு படை

'டார்க்' வலைதளம் மூலம் சிரிய நாட்டு பயங்கரவாதிகளைத் தொடர்புகொண்ட நபர் ஒருவர் பெங்களூருவில் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டார்.

ISIS militant identity found in Bengaluru who have connection with Syria

author img

By

Published : Jan 17, 2021, 4:49 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதையடுத்து, பெங்களூரில் உள்ள பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, டார்க் வலைதளம் மூலம் சிரியாவைத் தொடர்புகொண்டதாக ஒருவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், ராமநகராவைச் சேர்ந்த முஜீஜ் பேக் என்பது கண்டறியப்பட்டது. இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும், இணையம் வாயிலாக இவர் பயங்கர ஆயுதங்களை வாங்கியதும் தெரியவந்தது.

பின்னர், இவர் மீது பாதுகாப்புப் படையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் குறித்த போதுமான தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியாததையடுத்து, காவல் துறையினர் இவருடன் தொடர்புடையவர்களை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

முன்னதாக, பிரேவ் என்றழைக்கப்படும் அப்துல் ரஹ்மான் ஐஎஸ்ஐஎஸ்ஸுடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டது குறி்பபிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.