டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வெடித்த கலவரத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சையில் உள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உருக்கமான கவிதை ஒன்றை எழுதியுள்ளார். 'அமைதியான தேசம்... வன்முறை களமாக மாறியுள்ளது' என்ற கருத்துடன் இக்கவிதையை எழுதியுள்ளார்.
மம்தா கவிதையின் தமிழாக்கம்:
'நாம் எங்கே இருக்கிறோம்?
நாம் எங்கே போகிறோம்?
சொர்க்கத்திலிருந்து நகரத்திற்கு...
நாம் இழந்த பல உயிர்கள்
திரும்பி வரமுடியாத இடத்திற்குச் சென்றன
எத்தனை ரத்தம்?
எத்தனை கொலை?
கோபம் அனலாய் எரிகிறது
மனித நேயத்தை தவிக்கவிட்டு,
போக்கிடம் தெரியாமல் தொலைந்து விட்டோம்...
துப்பாக்கி முனையில் புயல் ஒன்று நாட்டை அச்சுறுத்துகிறது;
அமைதியான தேசம் வன்முறைக் களமாக மாறியதே...
இதுதான் ஜனநாயகத்தின் முடிவா
யார் இதற்குப் பதில் தருவார்கள்?
பதில் ஒன்று உள்ளதா என்ன...'
மம்தா பானர்ஜி வங்க மொழியில் எழுதியுள்ள இக்கவிதை ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இதையும் படிங்க: கொரியா, இத்தாலி, ஈரான் நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம்' - அரசு அறிவுறுத்தல்