கலை, இலக்கியம், பத்திரிகை, அறிவியல், விளையாட்டு, பொருளாதாரம், சமூகப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 12 பேரை மாநிலங்களவையின் நியமன உறுப்பினர்களாக நியமிக்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு இந்திய அரசியலமைப்பு வழங்குகிறது என்றாலும், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் மாநிலங்களவைக்குப் பரிந்துரைத்தது இதுவே முதல்முறையாகும்.
இது தொடா்பான மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், “இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 80ஆவது சட்டப் பிரிவின்படி, மாநிலங்களவை நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகோயை குடியரசுத் தலைவா் நியமித்துள்ளாா். ஏற்கனவே இருந்த ஒரு நியமன உறுப்பினா் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, இந்தப் புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அசாதுதீன் ஓவைசி, ‘இது முன்பு செய்த பணிக்கான கைமாறா? நீதிபதிகளின் சுதந்திரத்தில் மக்களுக்கு எவ்வாறு நம்பிக்கை இருக்கும் ? இப்படி பல கேள்விகள்" என ட்வீட் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்ற 46ஆவது தலைமை நீதிபதியாக அக்டோபர் 3,2018ஆம் ஆண்டு முதல் நவம்பர் 17, 2019ஆம் ஆண்டு வரையிலான 13 மாதங்கள் பணியாற்றினார். இவர், நீதிபதியாக பதவியில் இருந்த போது ரஃபேல் விவகாரம், மத்திய புலனாய்வு இயக்குநர் அலோக் வர்மா பதவி நீக்கம், சபரிமலை உள்ளிட்ட நாட்டின் மிக முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
குறிப்பாக, நவம்பர் 9, 2019 ஆம் தேதியன்று, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த அயோத்தி நில வழக்கில் அவர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தான் தீர்ப்பை வழங்கியிருந்தது. இவர் கடந்த ஆண்டு நவம்பா் 17ஆம் தேதி தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றாா். இந்த நிலையில், இது தற்போது சமூகவலைத் தளங்களின் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
-
Is it “quid pro quo”?
— Asaduddin Owaisi (@asadowaisi) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
How will people have faith in the Independence of Judges ? Many Questions pic.twitter.com/IQkAx4ofSf
">Is it “quid pro quo”?
— Asaduddin Owaisi (@asadowaisi) March 16, 2020
How will people have faith in the Independence of Judges ? Many Questions pic.twitter.com/IQkAx4ofSfIs it “quid pro quo”?
— Asaduddin Owaisi (@asadowaisi) March 16, 2020
How will people have faith in the Independence of Judges ? Many Questions pic.twitter.com/IQkAx4ofSf
இதையும் படிங்க : அமைச்சர் வீட்டில் தீ விபத்து: உயிர் தப்பிய கே.எஸ். ஈஸ்வரப்பா