கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஈரான் அரசு , ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக சனஹர் துறைமுகத்திலிருந்து ஜாகேடன் வரை ரயில் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் கையெழுத்திட்டிருந்தது.
ஆனால், தற்போது தெஹ்ரான் சொந்தமாகவே ரயில் பாதையை அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 628 கி.மீ. சபாஹர்-ஜாகேதன் ரயில் பாதை அமைக்கும் பணியை கடந்த வாரம் இஸ்லாமிய குடியரசின் போக்குவரத்து மற்றும் நகர அமைச்சர் முகமது எஸ்லாமி துவக்கி வைத்துள்ளார்.
இந்தத் திடீர் முடிவானது, சமீபத்தில் சீனாவுடன் ஈரான் அரசு சில ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்ட பிறகு நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.