கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் ரங்கராஜன் என்னும் நபர், அம்மாவட்ட உள்பாதுகாப்புப் பிரிவில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவருகிறார். இவர் நேற்றிரவு தனது முன்னாள் மனைவி இலக்கியா வீட்டின் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தன் குழந்தைகளைச் சந்திக்க தனது மனைவி அனுமதிக்காததால் தர்ணாவில் ஈடுபட்டதாகக் கூறிய அருண் ரங்கராஜனை, சமாதானம் செய்ய உயர் அலுவலர்கள் பலரும் முற்பட்டனர். இதையடுத்து பேசிய ரங்கராஜன், தன் மனைவி இலக்கியா தீயணைப்புத் துறையில் பணியாற்றிவருகிறார் என்றும் தன் குழந்தைகளைக் காண பெங்களூரு வந்ததாகவும் கூறினார். மேலும் குழந்தைகளைப் பார்க்க மனைவி சம்மதிக்காததால் தர்ணாவில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: மேலும் இரண்டு விஏஓ-க்கள் கைது