அமலாக்கத்துறை தொடர்ந்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுரேஷ் கைட், இதுகுறித்து ஒரே வாரத்தில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும், சிதம்பரத்தின் ஜாமீன் மனு குறித்த விசாரணையை நவம்பர் மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு சமீபத்தில்தான் ஜாமீன் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமலாக்துறையின் விசாரணை காவல் வரும் வியாழக்கிழமையுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் ஒருவாரம் விசாரணையை நீட்டிக்க அமலாக்கத்துறை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இதையும் படிங்க: ஆந்திர சிஎம் ஜெகமோகன் கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர்