ஜம்மு: காஷ்மீரில் நகர்ப்புறம், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்காக எட்டு கட்டங்களில், மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் ஆறு கட்டத்தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், ஏழாம்கட்ட தேர்தல் நாளை(டிச.16) நடைபெறுகிறது.
இதன்காரணமாக புல்வாமா, குல்காம், அனந்த்நாக் மற்றம் சோபியான் ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவடைந்தவுடன் மீண்டும் இணைய சேவைகள் வழக்கம் போல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடைபெற்ற ஆறு கட்டத் தேர்தலிலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் எட்டாம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து டிசம்பர் 22ஆம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்படும்.
இதையும் படிங்க: 'பிஎம்-வானி திட்டம் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தும்' - பிரதமர் நரேந்திர மோடி