ஜம்மு - காஷ்மீரில் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்ததால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.
அதைத் தொடர்ந்து மாநிலத்தின் உட்பகுதியுடன் எல்லைப் பகுதிகளிலும் இணைய தள சேவையை தேசத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் அதிகம் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.
இதனால் பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப்படலாம் என்பதால், அச்செயலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் மேலும் பாதுகாப்பு கருதியும் வரும் மார்ச் 4ஆம் தேதிவரை, மக்கள் பயன்பாட்டில் இருக்கும் இணைய தள சேவையைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக, அம்மாநில உள்துறை தலைமைச் செயலாளர் ஷாலின் கப்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் தடை..! நீடிக்கும் சோகம்..! சோகத்தில் பள்ளத்தாக்கு மக்கள்..!