இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், "ஜம்மு-காஷ்மீரில் இணையதளத்தைப் பயன்படுத்த இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை சேவை வசதியில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேக்-பிணைப்புடன் மட்டுமே இந்த இணைய சேவை செயல்படும்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதிச் சட்டப்பிரிவு 370 பறிக்கப்பட்டபோது காஷ்மீர் முழுவதும் இணைய சேவை முடக்கிவைக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் காஷ்மீரில் காலவரையறையின்றி இணையதளத்தை முடக்கிவைப்பதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததையடுத்து முடக்கிவைக்கப்பட்டிருந்த செல்போன் சேவைகள் மீண்டும் தொடங்கின. ஆனால் அப்போதும் இணையதள சேவைகள் மீதான தடைநீக்கம் மீளப்பெறப்படவில்லை.
இந்நிலையில் இன்று ஜம்மு - காஷ்மீர் முழுவதும் செல்போன்களின் இணையதள சேவைகள் பயன்படுத்த மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தூக்கு மேடையில் மாதிரியை வைத்து தூக்கிலேற்றி சோதனை செய்த பவன் ஜலாத்!