புதுச்சேரியில் சின்ன வீராம்பட்டினம் முதல் நோனங்குப்பம் வரை உள்ள பேரடைஸ் கடற்கரை பகுதிதான் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் கவரப்பட்டு வருகின்றது. இங்கு நீண்ட வெண்மணல் கொண்ட கடற்பரப்பில் காலாற நடக்கவும், விளையாடி மகிழவும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக விரும்புகின்றனர்.
இந்நிலையில் சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாதுகாப்பு, சுத்தமான கடற்கரையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மூன்று சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இக்கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கும், குறிப்பிட்ட பகுதியில் குளிக்கவும் மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'உலக அளவில் இந்தியாவில் 21 கடற்கரைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதில் புதுச்சேரியில் சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள கடற்கரையும் அதில் வந்துள்ளதாக கூறினார்.
மேலும் பேசிய அவர், இக்கடற்கரையில் குப்பைகள் கொட்டக் கூடாது, பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் பாதுகாப்பு கருதி 144 தடை போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையை தூய்மைப்படுத்திய மாணவர்கள்!