சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச நீதி நாள் ஆண்டுதோறும் ஜூலை 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகளாவிய போர்க்குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றை எதிர்கொள்ள நீதித்துறையின் முக்கிய நாளாக இன்று கருதப்படுகிறது.
பாலின பகுபாடு, பூர்வக்குடிகளின் உரிமை, புலம்பெயர்ந்த மக்களின் உரிமை உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் 'பாகுபாடுகளைக் களைந்து சமூக நீதியை அடைவோம்' என்ற முழக்கத்துடன் சர்வதேச நீதி தினம் இந்தாண்டு கொண்டாடப்படுகிறது.
நீதி தினத்தின் வரலாறு, முக்கியத்துவம்:
1997-98 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ரோம் ஸ்டாட்யூடி (Rome Statute) எனப்படும் ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. போர்குற்றம், இனப்படுகொலை, மனிதநேயத்திற்கு எதிராக குற்றங்கள், அத்துமீறலால் நடைபெறும் குற்றம் என்ற நான்கு கூறுகளின் அடிப்படையில் இந்த தினம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
சர்வதேச குற்றவியல் நடைமுறைகளை பலப்படுத்தவே இந்தத் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் தற்போது 123 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. நாடுகளுக்குள்ளே பேசி தீர்க்க முடியாத சிக்கல்களை விசாரிக்கவும் அதற்கு தீர்வளிக்கவும் இந்த அமைப்பு பணியாற்றிவருகிறது.
குல்பூஷண் ஜாதவ் என்ற இந்தியர் பாகிஸ்தானில் உளவு பார்த்தாகக் கூறி குற்றஞ்சாட்டப்பட்ட விவகாரத்தில் கூட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: பெண்கள் கடத்தப்படுவது அதிகரிப்பு - சக்தி பஹினி எச்சரிக்கை!