டெல்லி: ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக உத்தரப் பிரதேச மாநிலத்திலும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் அவர்களின் தடம் விரிவாக்க வெளிநாட்டு நிதிகள் கிடைத்துள்ளன.
டெல்லியில் இருந்து ஹத்ராஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மதுராவில் பி.எஃப்.ஐ உடன் தொடர்புடைய நான்கு பேரை உத்தரபிரதேச போலீசார் திங்கள்கிழமை (அக்.5) கைது செய்தனர்.
இயடுத்து, உளவுத்துறையின் எச்சரிக்கை உள்துறை அமைச்சகத்திற்கு (எம்.எச்.ஏ) அனுப்பப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) அனுப்பப்பட்ட எச்சரிக்கையில், புலனாய்வு அமைப்புகள் நாட்டின் தென் பகுதிகளில் நடவடிக்கைகளுக்குப் பிறகு, பி.எஃப்.ஐ.யின் ஸ்லீப்பர் செல் உறுப்பினர்கள் உத்தரப் பிரதேசத்தின் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்.சி.ஆர்) வலுப்பெற்றுவருகின்றனர்.
இந்த அமைப்பினர் பல்வேறு மாநிலங்களில் வன்முறையைத் தூண்டுவதாக கடந்தகால பதிவுகள் உள்ளன . தற்போது, அபிகுர் ரஹ்மான், சித்திகி, மசூத் அகமது மற்றும் ஆலம் என நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடையாளம் காணப்பட்ட இந்த நான்கு பேரும் பி.எஃப்.ஐ யின் மாணவர் பிரிவு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (சி.எஃப்.ஐ) உடன் தொடர்புடையவர்கள்.
இவர்கள் மாநிலத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடமிருந்து மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் சில நூல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இந்திய மக்கள் முன்னணியினர் இந்தக் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெளியான அறிக்கையில், “ரஹ்மான், மசூத், பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது. ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க சென்றவர்கள் இவர்கள்.
ஆகவே இது சட்டவிரோத கைது. தற்போது உத்தரப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை சந்திக்க விரும்புவது கூட ஒரு குற்றமாக கருதப்படுகிறது. மாநிலத்தில் தோல்வியுற்ற சட்டம் ஒழுங்கு நிலைமையை மறைக்க, பா.ஜ.க அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசு பி.எஃப்.ஐ தடை செய்ய பரிந்துரைத்து உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பியிருந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் முன்மொழியப்பட்ட தேசிய குடிமக்களின் பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களின் போது இந்த அமைப்பு "வன்முறையை தூண்டி சூத்திரதாரியாக செயல்பட்டது" என முதலமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார்.
2006 இல் அமைக்கப்பட்ட பி.எஃப்.ஐ, தன்னை ஒரு தொண்டர் அடிப்படையிலான இயக்கம் என்று விவரிக்கிறது.
ஆனால் இது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் (சிமி) உடன் தொடர்பு கொண்டதாக பரவலாக விமர்சிக்கப்படுகிறது.
குறிப்பாக, பி.எஃப்.ஐ அலுவலக பொறுப்பாளர்களில் பெரும்பாலோர் சிமி 2001 இல் தடை செய்யப்படுவதற்கு முன்பு ஒரு தொடர்பைக் கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.