ETV Bharat / bharat

ராணுவத்தின் டி.ஆர்.டி.ஓ-வில் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை குறைவு !

டெல்லி: இந்திய ராணுவத்திற்கு பக்கபலமாக இருக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (டி.ஆர்.டி.ஓ) அமைப்பில் விஞ்ஞானிகள் பற்றாக்குறையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

insufficient-manpower-in-drdo-for-research-parl-panel
ராணுவத்தின் டி.ஆர்.டி.ஓ-வில் விஞ்ஞானி எண்ணிக்கை படுகுறைவு !
author img

By

Published : Mar 15, 2020, 2:00 AM IST

இந்திய ராணுவத்திற்குத் தேவையான தொழில் நுட்பம், ராணுவ தளவாடங்கள் உள்ளிட்டவைக் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் அமைப்பாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு விளங்குகிறது. சுருக்கமாக டி.ஆர்.டி.ஓ (Defence Research and Development Organisation) என்பர்.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் டி.ஆர்.டி.ஓ அமைப்பில் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 131 விஞ்ஞானிகள் அவர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக வேலையை ராஜினாமா செய்திருக்கின்றனர். தற்போது டி.ஆர்.டி.ஓ-வில் பணிபுரிபவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 7 ஆயிரத்து 353 பேர் எனக் கூறப்பட்டாலும் 7 ஆயிரத்து 68 பேர்தான் உள்ளனர். அவர்களில் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை 30 விழுக்காடு என்னும் மிகவும் குறைந்த அளவில் உள்ளனர்.

கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து தற்போதுவரை டி.ஆர்.டி.ஓ-வில் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை ஆறு மடங்கு உயர்த்திருக்க வேண்டும் என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

இந்நிலையில் முற்கட்டமாக மத்திய நிதி அமைச்சகம் டி.ஆர்.டி.ஓ அமைப்பில் 436 பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்க்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையும் படிங்க: பனியில் சிக்கித் தவித்த 390 பேரை மீட்ட இந்திய ராணுவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.