74ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 'அமைதி கலாசாரம்' குறித்த உயர் மட்ட மன்றத்தில் பேசிய இந்திய ஆலோசகர் பவுலோமி திரிபாதி, "இந்தியாவுக்கு எதிராக வெறுக்கத்தக்க உரை நிகழ்த்துவதை விட்டுவிட்டு, தனது சொந்த நாட்டின் தற்போதைய நிலைமைகளை சுயமதிப்பீடு செய்து சிறுபான்மையினரைப் பாதுகாத்திட வேண்டும். இது வெட்கக்கேடான பேச்சு ஒன்றும் இல்லை.
இந்தியாவுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சுக்காக ஐ.நா. தளத்தை பாகிஸ்தான் தூதுக்குழு மீண்டும் பயன்படுத்திக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் உள்நாட்டிலும் அதன் எல்லைகளிலும் ஒரு 'வன்முறை கலாசாரத்தை' தொடர்ச்சியாக வளர்த்துக் கொண்டிருக்கிறது. மேலும், பாகிஸ்தானின் இழிவான மனித உரிமைப் பதிவுகள், மத மற்றும் இன சிறுபான்மையினரைப் பாரபட்சமாக நடத்துவதை சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது.
இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற மத சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமைகள் நடத்திட அவதூறு சட்டத்தை பாகிஸ்தான் கையில் எடுத்துள்ளது. பெண்கள் கடத்தப்படுவதும், பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும், பலவந்தமாக மதம் மாற்றப்படுவதும், பிடிக்காதவர்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைப்பதும் அதிகளவில் நடைபெறுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கரோனா பாதிப்பும் பாகிஸ்தானில் அதிகளவில் உள்ளது" எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.