ETV Bharat / bharat

'நண்பன்' வைரஸின் பேத்தியா! வியக்க வைக்கும் சத்தீஸ்கர் சிறுமி! - 3 இடியட்ஸ்

ராய்பூர்: நண்பன் படத்தில் வரும் வைரஸ் கதாபாத்திரம்  போல சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி, ஒரே நேரத்தில் இரு கைகளிலும் எழுதும் ஆற்றல் பெற்றுள்ளார்.

Raipur-based teenage girl perfects mirror writing
author img

By

Published : Sep 16, 2019, 11:20 PM IST

இந்தியில் அமீர் கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் '3 இடியட்ஸ்'. இது, பின்னர் தமிழில் நடிகர் விஜய், ஜீவா நடிப்பில் 'நண்பன்' என்ற பெயரில் ரீமெக் செய்யப்பட்டது . இத்திரைப்படத்தில் வரும் சத்தியராஜ் கதாபாத்திரத்தைப் போல சத்தீஸ்கரைச் சேர்ந்த காவ்யா சாவ்தா என்ற சிறுமி, இரு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதும் அபார ஆற்றல் பெற்றுள்ளார்.

தனது தனித்துவ திறமை குறித்துப்பேசிய காவ்யா சாவ்தா, "இப்படி ஒரே நேரத்தில் இரு கைகளால் எழுதப் பொறுமை மிக முக்கியம். நான் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த பயிற்சி செய்துவருகிறேன். இப்படி எழுதுவதற்கான ஐடியா '3 இடியட்ஸ்' திரைப்படத்திலிருந்து எனக்கு வந்தது" என்று கூறினார்.

தற்போது 7ஆம் வகுப்பு படித்துவரும் காவ்யா, ஒரு கையால் நேராகவும் மற்றொரு கையால் தலைகீழாகவும் எழுதும் ஆற்றலைப்பெற்றவர். அதாவது இவர் ஒரு கையால் எழுதும் எழுத்துகள் நேராகப் பார்த்தாலும் மற்றொரு கையால் எழுதும் எழுத்துக்கள் கண்ணாடியைக்கொண்டு பார்த்தாலும் புரியும் வகையில் உள்ளது. மேலும் "இவ்வாறு எழுத முதலில் ஆங்கிலத்தில் கற்றுக்கொண்டு, பின்னர் இந்தியிலும் எழுதப் பழகியதாக கூறினார்.

இதுகுறித்து பேசிய காவ்யாவின் தாயார் நேஹா சாவ்தா, "நான்கு வருடங்களாக ஒவ்வொரு நாளும் பள்ளி பாடங்களை முடித்தவுடன் தினமும் இதைப் பயிற்சி செய்வார்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.