ETV Bharat / bharat

இந்தியா-நேபாள வரைபட சர்ச்சை - மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை!

ஹைதராபாத்: இந்திய நேபாள வரைபட சர்ச்சை குறித்த பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை என இந்திய- நேபாள உறவுகளை உற்று நோக்கிவரும் அரசியல் ஆய்வாளர் யுபராஜ் கிமிர் தெரிவித்தார்.

Indo-Nepal  Nepal  India  cartographic tussle  dialogue  Nepalese political analyst  Regional Editor  Braj Mohan Singh  ETV Bharat  Yubaraj Ghimire  Lipu Lekh  Limpiadhura  Kalapani  Indo- Nepal relationship  friendship  இந்தோ சீனா உறவு  நேபாள வரைபட சர்ச்சை  இந்திய சீனா உறவு வரலாறு  நேபாள மாவோயிஸ்ட்
இந்தியா-நேபாள வரைபட சர்ச்சை: மூன்றாம் தரப்பு தலையீடு தேவையில்லை
author img

By

Published : Jun 25, 2020, 12:09 AM IST

இந்தியாவுடன் அதிக நட்புறவாகவும், நல்லிணக்கமாகவும் இருந்துவரும் நாடு நேபாளம். இந்தியாவுக்கு வெளியே, இந்து மதம் முழுமையாக பரவியிருக்கும் நாடு நேபாளம் என்பது குறிப்பிடத்தக்கது.

கலாச்சார அடிப்படையிலும், பொருளாதார, சமூக அளவிலும் இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் மிகப் பெரிய பிணைப்பு இருந்து வருகிறது. அனால் தற்போது நிகழும் காட்சிகள் அந்த பிணைப்பை உடைப்பது போலுள்ளது.

இந்த சிக்கலான சூழலில், இந்திய- நேபாள உறவுகளை கடந்த 30 ஆண்டுகளாக உற்று நோக்கி வரும் அரசியல் ஆய்வாளர் யுபராஜ் கிமிர், நமது ஈடிவி பாரத் மண்டல ஆசிரியர் ப்ரஜ் மோகனுடன் உரையாடியுள்ளார். அவர்களது உரையாடலின் சிறு பகுதி இங்கே:

இந்திய – நேபாள உறவை எப்படிப் பார்க்கிறீர்கள்? இந்த இரு நட்புறவு நாடுகளுக்குள் பூசல்கள் ஏற்பட காரணம் என்ன?

கோவிட்-19 பாதிப்புகளால் உலகளவில் அசாதாரணமான சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய- சீன- நேபாள நாட்டு எல்லையில் 370 சதுர கிமீ பரப்பளவு கொண்ட காலாபாணி, லிம்பியாதூரா, லிபு லேக் ஆகிய பகுதிகளில் பற்றம் ஏற்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின் இந்திய எல்லைக்குட்பட்டு அதன் வரைபடத்தில் உள்ள இந்த மூன்று பகுதிகளையும், தனது வரைபடத்திற்குள் நேபாளம் சேர்த்ததால் பதட்டம் அதிகரித்துள்ளது.

இந்த மூன்று பகுதிகளையும் இந்திய வரைபடத்தில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நேபாளம், தங்களது வரைபடத்திற்குள் மாற்றங்கள் செய்து இந்த மூன்று பகுதிகளையும் சேர்த்துள்ளது.

இது தொடர்பாக இந்திய- நேபாள நாடுகளிடையே பேச்சு வார்த்தை தொடங்கியது. ஆனால் கோவிட்- 19 தொற்று காரணமாக பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்று பாதிப்புகள் முடிந்த பின் இருதரப்பிலும் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று நம்புகிறேன்.

இந்தியாவுடன் நீண்டகால இணைப்பில் இருக்கும் காலாபாணி, லிம்பியாதூரா, லிபு லேக் ஆகிய மூன்று பகுதிகளையும் தங்களது வரைபடத்துக்குள் சேர்த்துள்ள நேபாளம், அதற்கான மசோதாவிற்கு ஒப்புதலை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அளித்திருக்கிறது. இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை பலப்படுத்துவதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணுகிறீர்களா?

இந்தியாவின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாயும், நேபாள பிரதமராக கிரிஜா பிரசாத் கொய்ராலாவும் இருந்த போது, இரு தரப்பிலும் வேறுபாடுகளைக் களைய பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வெளியுறவுத்துறைச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் தீர்வுகளை எட்ட இயலவில்லை. இருதரப்பிலும் பூசல்கள் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு லிபு லேக் பகுதியில் சாலை அமைக்க இந்தியாவும் சீனாவும் முடிவு செய்தன. இந்த முடிவு தங்களை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்டது என்று நேபாள தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சாலை கட்டுமானம் நேபாளத்தின் வெள்ள பாதிப்புக்கு உள்ளானது.

இன்று இந்த சிக்கல் உணர்வுப்பூர்வமானதாக மாறியிருக்கிறது. வரலாற்று ஆவணங்களை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தை நடத்தினால் நிச்சயம் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும்.

நேபாளத்தில் கம்யூனிச கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவுடனான தனது நிலைப்பாட்டை இறுக்கமாக்குவதாக இந்திய தரப்பில் கூறப்படுகிறது. இந்த இருநாடுகளும் நெருக்கமாக இருந்த அளவுக்குக் கூட இந்தியாவும் சீனாவும் இருந்ததில்லை என்று கருதப்படுகிறது. உண்மையா?

இது முக்கியமான, அதே நேரம் சுவாரஸ்யமான உண்மை. நேபாளத்தின் மூன்று எல்லைகளும் இந்தியாவை சுற்றியிருக்கின்றன. நேபாளத்தின் 70 சதவீத வர்த்தகம் இந்தியாவுடன் மட்டுமே நடந்து வருகின்றது.

ஒரு காலத்தில் மேற்படிப்புக்காக இந்தியாவை நம்பும் நிலையில் நேபாளம் இருந்தது. மாணவர்கள் தங்கள் மேற்படிப்புகளுக்காக லக்னோ, பனாரஸ், பாட்னாவுக்கு வந்தனர். இந்த நிலை தற்போது இல்லை.

இந்தியா தனது கலாச்சார, அரசியல், மதரீதியான கூட்டுறவை நேபாளத்துடன் கொண்டிருந்தது. நேபாள அரசியலில் இந்தியாவின் செல்வாக்கு அதிகமாகவே இருந்தது. ஆனால் 2005ஆம் ஆண்டு நேபாளத்தில் மாவோயிய அரசியல் நுழைந்ததும் இந்த நிலை மாறியது. ஆரம்ப நிலையில் இந்தியா அவர்களை தீவிரவாதிகள் என அறிவித்தது. ஆனால் பின்னர் அவர்கள் நேபாளத்தில் அரசியல் செயலாக்கங்களில் அதிகளவில் பங்களிக்கத் தொடங்கினர். இதன் பின்னர் இந்தியா தனது நிலைப்பாட்டை தளர்த்தி, அவர்களுடன் ஒருங்கிணைந்து, அரசாட்சிக்கு மாற்றாக ஜனநாயக ஆட்சியை அங்கு ஏற்படுத்த பாதை வகுத்துக் கொடுத்தது.

இதன் பின் நேபாளம் மதச்சார்பற்ற நாடாக மாறியது. மிகப் பெரிய மாற்றங்கள் அங்கு ஏற்பட்டன. நேபாளத்தில் ஜனநாயக ஆட்சியை கொண்டு வர தோள் கொடுத்த இந்தியாவுக்கு அன்றே தெரியும், ஒரு நாள் நேபாளம் தங்களுக்கு எதிராகத் திரும்பும் என்று.

நேபாளத்தில் ஜனநாயகத்துக்கு ஆதரவளித்தவர்களுக்கு இந்தியா தோள் கொடுத்தது. அங்கு ஜனநாயகம் மலர இந்தியா உறுதுணையாக நின்றது. ஆனால் திடீரென நேபாளத்தில் இந்தியாவுக்கு எதிரான போக்கு உருவானதன் காரணம் என்ன?

நேபாள அரசாட்சியும், நேபாளி காங்கிரஸும் இந்தியாவின் கூட்டிணைவைப் பெரிதும் நம்பினார்கள். 2005ஆம் ஆண்டு இந்தியா கம்யூனிச அரசியலை ஆதரித்ததால், இந்த இரு தரப்பும் இந்தியா மீது வெறுப்பாகின. நேபாளி காங்கிரஸ் சரணடைந்து, ஜனநாயக முறைப்படி தனது அதிகாரத்தை விட்டுக்கொடுத்தது.

ஐரோப்பிய யூனியனில் இந்தியா நுழைந்தது, நேபாளத்திற்குள் அமெரிக்கா நுழைந்தன் மூலம், இந்திய அரசியலில் சீனா ஆர்வம் காட்டத் தொடங்கியது.

நேபாளத்தில் இந்தியாவைப் போல சீனாவின் முதலீடும் அதிகளவில் பெருகியதால் அங்கு அசாதாரண சூழல் உருவாகியது. நேபாளி காங்கிரஸ் அங்கு மிக முக்கிய பங்கு வகித்தாலும், 12 அம்ச ஒப்பந்தத்தின் விளைவாக கம்யூனிசத்திடம் முழுமையாக சரணடைந்தது.

அப்படியானால் தற்போது நேபாளி காங்கிரஸ் அந்நாட்டில் அரசியல் முழு வீச்சுடன் களமிறங்குவதற்கு நேரம் வந்து விட்டதாக கருதுகிறீர்களா?

நேபாளி காங்கிரஸ் என்பது மிதவாத அரசியல் கட்சி. அது மாவோயிய குழுக்களுடன் இணைந்தால், தனது இணக்கத்தன்மையை இழந்து விடும். தாங்கள் தவறு செய்து விட்டதாக காங்கிரஸுக்குள் கருத்து நிலவி வருகிறது. தற்போது ஆட்சியில் அவர்கள் அமர்வதற்கான தேவை அதிகரித்துள்ளது.

நேபாளத்தில் கம்யூனிச கட்சியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது, அங்கு சீன-பாகிஸ்தான் பொருளாதார மையம் (சிபிஇசி) மூலமாக வலுவான ஆதரவுக்கரம் நீட்டுவதாக சீனா உறுதியளித்துள்ளது, ஆனால் சீனாவின் அதிகப்படியான தலையீட்டால் நேபாள மக்களியையே எதிர்ப்பு கிளம்பக்கூடும்.

இதற்கு முன்னர் பல்வேறு சிக்கல்களைக் களைவதற்கு நேபாள அரசாட்சி உதவியது. ஆனால் தற்போது இந்திய – நேபாள சமரச பேச்சுவார்த்தையை நடத்தி வைக்க யாரேனும் முன்வருவார்களா?

அது தற்போது கடினம். நேபாளத்தைப் பொறுத்தவரை சங்கராச்சாரியர் மிகுந்த சக்தி வாய்ந்தவராக கருதப்பட்டார். நேபாளத்தில் சாலை அமைக்க சீனா ஒப்பந்தம் பெற்ற விவகாரத்தில் இந்தியா தனது ஆட்சேபனையை தெரிவித்தது. இதையடுத்து நேபாளம் அதை கைவிட்டது. இந்தளவுக்கு இருநாடுகளும் பரஸ்பர மரியாதையைக் கொண்டிருந்தனர். அந்த நிலை தற்போது இல்லை.

நேபாள நாடாளுமன்றத்தில் புதிய வரைபடத்திற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு, விரைவில் இந்திய – சீன பேச்சுவார்த்தை நடக்கும் என்று கணிக்கிறீர்களா?

இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு மாற்று எதுவுமே இல்லை. ஒரு பகுதியை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்புகள் உரிமை கொண்டாடும் போது, அது சர்ச்சைக்குரிய பகுதியாகிறது. இது சர்ச்சைக்குரிய பிராந்தியம் என்று இந்திய-நேபாள தரப்புகள் ஒரு கட்டத்தில் ஒப்புக்கொண்டுள்ளன. எனவே பேச்சுவார்த்தையை ஏன் நடத்தக்கூடாது.

இந்த சூழலில் இந்திய – நேபாள உறவு எப்படி இருக்கப் போகிறது என்று கருதுகிறீர்கள்?

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டதைப் போலவே, 2005ஆம் ஆண்டு மாவோயிய குழுக்களுடன் இந்தியா கூட்டிணைந்தது தவறு. இது தான் இந்தியா மீதான நம்பிக்கையை நேபாளம் இழக்கக் காரணம். அந்த நேரத்தில் தங்களை இந்தியா முதுகில் குத்திவிட்டதாக அரசு தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது, இதே போல், தீவிரவாத குழுக்களுக்கு ஆதவரளித்ததால் தான் அவர்களிடம் தாங்கள் சரணடைந்ததாக நேபாளி காங்கிரஸும் குற்றம் சாட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா-நேபாளம் மோதலும், சீனாவின் தலையீடும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.