உலகளவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது. இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஊடரங்கை மே 3ஆம் தேதிவரை நீட்டிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்தியாவில், கரோனாவின் தாக்கம் கட்டுக்குள் இருக்கிறது, சமூகப் பரவல் இல்லை. கரோனா வைரஸ் இரண்டாம் நிலையில்தான் உள்ளது எனத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் கூறிவருகின்றன.
இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவால் 1076 பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 38 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கரோனா உயிர்க்கொல்லி நோய் அல்ல; வேகமாகப் பரவ மட்டுமே செய்யும். இதனை மன நம்பிக்கை, உடல் ஆரோக்கியத்துடன் சமூக விலகலைக் கடைப்பிடித்தாலே அதிலிருந்து அனைவரும் விடுபடலாம்.
இதற்குச் சான்றாகவும், நம்பிக்கையூட்டும்விதமாகவும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஆயிரத்து 306 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் பார்க்க: மாவட்ட வாரியாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு!