கோவிட்-19 பரவைலக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மார்ச் இறுதி வாரம் முதல் பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும், அவை வழக்கமாக இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் வெறும் ஐந்து விழுக்காடாக மட்டுமே உள்ளது.
மேலும், இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு புதிய முயற்சிகளை இந்திய ரயில்வே எடுத்துவருகிறது. குறிப்பாக, சரக்கு ரயில் சேவைகளில பல புதிய சாதனைகளையும் ரயில்வே துறை படைத்துவருகிறது.
இந்நிலையில், புதிய மைல்கல்லாக 251 பெட்டிகளுடன் கூடிய 2.8 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சரக்கு ரயிலை இந்தியன் ரயில்வே தற்போது இயக்கியுள்ளது. ஷேஷ் நாக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் தென் கிழக்கு ரயில்வே துறை சார்பில் இயக்கப்பட்டுள்ளது.
-
Taking a big leap in reducing the transit time of freight trains, Bilaspur division of SECR broke yet another frontier by joining & running 3 loaded trains (more than 15000 tonnes) in 'Anaconda' formation through Bilaspur & Chakradharpur divisions. pic.twitter.com/5lZlQHDpkI
— Ministry of Railways (@RailMinIndia) June 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Taking a big leap in reducing the transit time of freight trains, Bilaspur division of SECR broke yet another frontier by joining & running 3 loaded trains (more than 15000 tonnes) in 'Anaconda' formation through Bilaspur & Chakradharpur divisions. pic.twitter.com/5lZlQHDpkI
— Ministry of Railways (@RailMinIndia) June 30, 2020Taking a big leap in reducing the transit time of freight trains, Bilaspur division of SECR broke yet another frontier by joining & running 3 loaded trains (more than 15000 tonnes) in 'Anaconda' formation through Bilaspur & Chakradharpur divisions. pic.twitter.com/5lZlQHDpkI
— Ministry of Railways (@RailMinIndia) June 30, 2020
வழக்கமாக இயக்கப்படும் நான்கு சரக்கு ரயில்களை இணைத்து இந்த நீளமான ரயில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ரயிலை இயக்க நான்கு மின்சார இன்ஜின்களைப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தென்கிழக்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, 177 பெட்டிகள், அதாவது மூன்று வழக்கமான சரக்கு ரயில்களை இணைத்து உருவாக்கப்பட்ட சூப்பர் அனகோண்டா என்ற ரயிலை கடந்த ஜூன் 30ஆம் தேதி தென்கிழக்கு ரயில்வே இயக்கியிருந்தது.
இவ்வாறு பல சரக்கு ரயிலை இணைத்து இயக்குவதால், எவ்வித கூடுதல் செலவுமின்றி அதிக சரக்குகளை விரைவாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடிவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: இந்திய வரலாற்றில் முதன்முறையாக... சரியான நேரத்தில் இயக்கப்பட்ட இந்திய ரயில்கள்!