இந்தியாவில் முதல் தண்ணீருக்கு அடியில் செல்லும் ரயில் திட்டம் கொல்கத்தாவில் உள்ள ஹப்லி ஆற்றில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 16கி.மீ. தூரம் கொண்ட இந்த ரயில் பணிகள் கொல்கத்தா மெட்ரோ திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றன.
கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் செக்டாரில் தொடங்கி சால்ட் லேக் ஸ்டேடியம் வரை இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. விரைவில் ரயில்வே பணிகள் நிறைவடைந்து மக்கள் செயல்பாட்டிற்கு கொண்டவரவுள்ளது என்று பியூஷ் கூறியுள்ளார்.
இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதனால் கொல்கத்தா மக்களுக்கு சுலபமான ரயில் பயணமாகவும், இந்தியாவில் முதல் நீருக்கும் அடியில் ரயில் என்ற பெருமையும் அவர்களை சேரும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.