ETV Bharat / bharat

இந்தியாவில் 12 லட்சத்தை கடக்கும் தினசரி கரோனா பரிசோதனை! - தேசிய சராசரி

டெல்லி: நாட்டில் ஒரு நாளில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

India's COVID-19 tally crosses 56 lakh mark

author img

By

Published : Sep 23, 2020, 1:17 PM IST

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகள் குறித்து ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் ஒரு நாளில் மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 12 லட்சத்தைக் கடந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 6.5 கோடி பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம், தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விரைவில் குறைக்க முடியும்.

பல மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தேசிய சராசரியைவிட அதிகளவு கரோனா பரிசோதனையை மேற்கொண்டுவருகின்றன. அதுமட்டுமின்றி, சோதனைகளை அதிகரிப்பதன் மூலம் பல மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி, பிறரும் தொற்றால் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்துகின்றன.

இதனால் அப்பகுதிகளில், தேசிய சராசரியைவிட குறைந்த அளவு கரோனா நோயாளிகளே உள்ளனர்.

  • As India rides the wave of very HIGH testing, several States/UTs have demonstrated better #COVID19 response with higher Tests Per Million (TPM) and commensurate lower Positivity Rate than the national average.

    — Ministry of Health (@MoHFW_INDIA) September 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று (செப் 22) 55 லட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதிதாக 75 ஆயிரத்து 83 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஆயிரத்து 53 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தற்போது மருத்துவமனைகளில் ஒன்பது லட்சத்து 75 ஆயிரத்து 861 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் பாராட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.