இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தற்போது சற்று குறைந்துவருகிறது. தற்போது தினசரி சுமார் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதேசமயம், குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. புதிய நோய்த்தொற்றுகளைவிட குணமடையும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்நிலையில், இன்று (நவ. 6) கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டது. அதில், “இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 84 லட்சத்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்பு 84 லட்சத்து 11 ஆயிரத்து 724ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 47 ஆயிரத்து 638 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 670 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 985ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்து 65 ஆயிரத்து 966 ஆக உயர்ந்துள்ளது. இதில், நேற்று (நவ. 5) மட்டும் 54 ஆயிரத்து 157 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 2348 பேருக்கு கரோனா உறுதி