'கஃபே காபி டே' உரிமையாளர் வி.ஜி. சித்தார்த்தா நேற்றைய முன்தினம் கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது மாயமானார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடிவந்தனர்.
இதனிடையே சித்தார்த்தா, 'கஃபே காபி டே' வாரிய இயக்குநர்களுக்கு எழுதிய கடிதம் தற்போது கிடைத்தது. அதில் பங்குகளை திரும்பப் பெற வேண்டும் என அழுத்தம் கொடுத்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என அதில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை காணாமல்போன வி.ஜி.சித்தார்த்தா உடல் மங்களூருவில் உள்ள நேத்திராவதி கழிமுகப்பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.