ETV Bharat / bharat

போருக்கான சாத்தியக்கூறுகள் குறைவு - ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஜெனரல் எஸ்.பி. சின்ஹா

author img

By

Published : Jun 18, 2020, 8:24 PM IST

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் சீன ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, நாட்டில் பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், போருக்கான சாத்தியக்கூறுகள் குறைவு என ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஜெனரல் எஸ்.பி. சின்ஹா கூறியுள்ளார்.

போருக்கான சாத்தியக்கூறுகள் குறைவு - ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஜெனரல் எஸ்.பி. சின்ஹா
போருக்கான சாத்தியக்கூறுகள் குறைவு - ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஜெனரல் எஸ்.பி. சின்ஹா

"இந்தியா - சீனா நாடுகளுக்கிடையே போர் நிகழும் என கணிக்கப்பட்டால், அது தவறு இரு நாடுகளுக்கிடையே போருக்கான சாத்தியக்கூறுகள் குறைவு" என சின்ஹா கூறுனார். கல்வான் பள்ளத்தாக்கை பாதுகாக்கும்போது தயார் நிலையில் இல்லாத இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவம் எட்டு மணி நேரம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டது. இதன் விளைவாக, கர்னல் சந்தோஷ் பாபு மற்றும் பிகார் ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த 19 வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இரு நாட்டு உறவை சிக்கலுக்குள்ளாக்கியுள்ளது.

"இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால், சீண்டினால் தேவைப்படும் நேரத்தில் தக்க பதிலடி தரப்படும். அதற்கான திறன் எங்களிடம் உள்ளது" என மோடி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, திட்டமிட்டு நடத்தப்பட்ட சீனாவின் தாக்குதலுக்கு எதிராக மக்களின் மனநிலை கொந்தளித்தது. ஆனால், இரு நாட்டு தலைவர்களும் போரை விரும்ப மாட்டார்கள் என சின்ஹா கூறுகிறார்.

இது குறித்து மேலும் கூறிய சின்ஹா, "போர் நிகழ்ந்தால் பொருளாதாரம் மோசமடையும். ஆட்சி மாற்றம் மட்டுமின்றி பல காட்சிகள் அரங்கேறும். இதைக் கருத்தில் கொண்டு இந்தியாவும் சரி, சீனாவும் சரி போருக்கு ஆதரவு தெரிவிக்காது. சீனாவில் போர் மிரட்டல் உண்மையானது அல்ல. ஏனெனில், தங்களின் குழந்தைகள் போர் மூலம் இறப்பதை அங்குள்ள குடும்பங்கள் விரும்பாது. இந்த விவகாரத்தில், இந்தியா நல்ல நிலையில் உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்திய ராணுவம் சிறப்பாகவே செயல்படுகிறது. 1962ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற போர்களில் இந்தியா தக்க பதிலடியையே தந்துள்ளது.

சீனாவின் பொருளாதார நிலை, அந்நாட்டு தலைமைக்கு சவால் விடும் நிலையில் உள்ளது. அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையில் இந்தியா சமீபத்தில் திருத்தம் மேற்கொண்டது. இது சீனாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த திருத்தத்தின் மூலம், அண்டை நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னதாகவே மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.

நேரடியாக அல்லாமல் சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் மாற்றுத் தலைமையில் நாட்டில் மறைமுகமாக முதலீடு செய்வதற்கும் மத்திய அரசின் ஒப்புதல் தேவை என இந்தியா அறிவித்துள்ளது. உளவியல் ரீதியான போரை சீனா மேற்கொள்ளும். முக்கியத்துவத்தை கருதி லடாக்கின் சிரிஜப் பகுதியில் உள்ள பிங்கர் 4 பகுதியை இந்தியா மீட்டெடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: கல்வானில் என்னதான் நடந்தது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.