ETV Bharat / state

ரேஷன் பொருட்கள் வாங்குவதில் தகராறு.. ஒருவருக்கு கத்தி வெட்டு.. வேலூரில் நடந்தது என்ன? - Vellore Ration Shop Issue - VELLORE RATION SHOP ISSUE

Ration Shop Dispute Issue In Vellore: வேலூர் மாவட்டம் ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வெகு தூரம் செல்லும் நிலை உள்ளதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் தக்கப்பட்டதாகவும் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 1:37 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வெப்பாலை பஞ்சாயத்து உட்பட்ட பகுதியில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு உள்ள பொதுமக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க, 3 கி.மீ தூரத்தில் உள்ள வெப்பாலை என்ற பகுதியில் இயங்கக்கூடிய ரேஷன் கடைக்கு செல்லவேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என்று அப்பகுதியினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்ததாகவும், அதற்காக சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (செப்.06) ரேஷன் கடை ஊழியர் விடுமுறை எடுத்துக் கொண்டதால், அதற்குப் பதிலாக நேற்று (செப்.08) கடையை திறந்து வைத்துள்ளார். இதன் காரணமாக, வழக்கம்போல் ராமகிருஷ்ணாபுரம் பொதுமக்கள் வெப்பாலை பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர்.

அப்போது, ரேஷன் கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும், வெப்பாலை பகுதியைச் சேர்ந்த யோவான் என்பவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றிய நிலையில் யோவான், சுதாகரை பலமாக தாக்கியதாகவும் கையில் இருந்த கத்தியால் கழுத்தில் கீறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த, ராமகிருஷ்ணாபுரம் பொதுமக்கள் திருவலம் பொன்னை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமகிருஷ்ணாபுரத்தில் பகுதி நேர ரேஷன் கடை துவக்க வேண்டும் என்றும் கத்தியால் தாக்கிய யோவான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். சாலையின் குறுக்கே கட்டளை போட்டும் சாலையில் அமர்ந்தும் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வழங்கல் அலுவலர் மற்றும் போலீசார், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, விரைவில் ராமகிருஷ்ணாபுரத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தாக்குதலில் ஈடுபட்ட யோவான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததன் பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருப்பூரில் பயங்கரம்..! மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன் தானும் தற்கொலை - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.