சென்னை: விடுமுறை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஜாலி தான். விடுமுறை நாட்களில் நாம் நமது குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் வெளியே செல்வது என நிறைய பிளான் போட்டு வைத்திருப்போம். வருடத்தில் உள்ள 12 மாதங்களில் சில மாதத்தில் குறைவாகவும், சில மாதத்தில் அதிகமாகவும் விடுமுறை வரும்.
அந்த வகையில், செப்டம்பரில் மொத்தம் 9 விடுமுறை நாட்கள் உள்ளன. செப்டம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை என்பதால் வங்கிகள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. செப்.7 விநாயகர் சதுர்த்தி என்பதால் பொது விடுமுறையாகும். செப்.8 ஞாயிற்றுக்கிழமை.
மேலும், செப்.15 ஞாயிற்றுக்கிழமை. அதனைத் தொடர்ந்து, இம்மாதத்தில் ஓணம் பண்டிகை வருவதால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மட்டுமே விடுமுறை இருக்கும். செப்.16 மிலாடி நபி என்பதால் வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் இந்த நாளில் இயங்காது. செப்.22 ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறையாகும். மேலும், செப்.28 நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். செப்.29 ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாராந்திர விடுமுறை ஆகும்.
மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்தாண்டிற்கான காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இந்த மாதத்தில் காலாண்டுத் தேர்வு நடைபெறும். காலாண்டுத் தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : அம்ரித் பாரத் திட்டத்தால் 100 ஆண்டுகளாக செயல்படும் மயிலாடுதுறை ஆர்எம்எஸ் போஸ்ட் ஆபிஸ் மாற்றமா? எகிறும் எதிர்ப்பு! - Rail Mail Service post office