ETV Bharat / state

தூத்துக்குடி சிறையில் படுக்க இடம் பிடிப்பதில் மோதல்... 9 பேர் காயம்.. 46 கைதிகள் மீது வழக்குப்பதிவு! - thoothukudi jail clash

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 1:35 PM IST

clash between Prisoners in thoothukudi jail: தூத்துக்குடி சிறையில் கைதிகள் இடையே நடந்த மோதலில் 9 பேர் காயமடைந்த நிலையில், 46 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரூரணி சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்
பேரூரணி சிறையில் கைதிகளுக்கிடையே மோதல் (credit - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், பேரூரணியில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விசாரணை கைதிகள் 200 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். நான்கு பகுதிகளாக இந்தச் சிறை பிரிக்கப்பட்டு, விசாரணை கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விசாரணை கைதி சந்தனகுமார் மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விசாரணை கைதி ஜெயச்சந்திரன் ஆகியோரிடையே சிறையில் படுத்து உறங்குவதில் இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகராறில் இரு பிரிவாக கைதிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சிறை காவலர்கள் உடனடியாக அங்கு வந்து மோதலை கட்டுப்படுத்தியுள்ளனர். இதில் ஒன்பது பேருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டு சிறைக்குள்ளேயே சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, மாவட்ட சிறைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தினர். மேலும், சிறைக்குள் கைதிகளிடையே ஏற்பட்ட மோதல் குறித்து சிறைத்துறை டிஐஜி பழனி நேற்று மாலை விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 46 பேர் மீது தட்டப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட சிறையில் கைதிகளிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: திருப்பூரில் பயங்கரம்..! மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன் தானும் தற்கொலை - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.