ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி: சரியான பாதையில் செல்கிறதா இந்தியா? - இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள்

மனிதர்களின் வாழ்வை மிகவும் மோசமாக பாதித்துள்ள இந்த கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முயன்றுவருகின்றனர்.

Indian Vaccine under Right Direction
Indian Vaccine under Right Direction
author img

By

Published : Jul 13, 2020, 8:50 PM IST

இந்தியாவில் சராசரியாக தினசரி ஒரு கோடி பேருக்கு கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களில் 25,000க்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 உறுதி செய்யப்படுகிறது.

கரோனா தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் மோசமடைந்துவருகிறது. இதுவரை ஏறத்தாழ ஏழு லட்சம் பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரழந்துள்ளனர். இருப்பினும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 60 விழுக்காட்டிற்கும் மேலானவர்கள், அதிலிருந்து மீண்டுவந்துள்ளது ஒரு நற்செய்தியே!

இந்தியாவில் 14 மாநிலங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட கரோனா வழக்குகளுடன், வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு சற்றே பின்னர், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கரோனா வழக்குகளுடன் தேசிய தலைநகரான டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. அதேபோல இரண்டு தெலுங்கு பேசும் மாநிலங்களிலும் கரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இது நிலைமையின் தீவிரத்தை உணர்த்தும்.

மனிதர்களின் வாழ்வை மிகவும் மோசமாக பாதித்துள்ள இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கக் கூடிய தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து முயன்றுவருகின்றனர்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ஃபேபிஃப்ளூ ( Fabiflu - காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் ஒரு ஜப்பானிய மருந்து), ரெம்டெசிவிர் (எபோலாவை கட்டுப்பாட்டுத்த உருவாக்கப்பட்ட மருந்து), ஹைட்ராக்ஸி குளோரிகுவின் (மலேரியா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து) ஆகியவற்றை பயன்படுத்தி குணப்படுத்த முயன்றுவருகின்றனர். மறுபுறம் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் தடுப்புமருந்து சோதனைகள் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் தான் உருவாக்கியுள்ள தடுப்புமருந்தின் மனிதர்கள் மீதான சோதனை வரும் திங்கட்கிழமை தொடங்கும் என்று ராஜஸ்தானிலுள்ள நிம்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்திய மருத்து ஆராய்ச்சி கழகத்தின் ஒத்துழைப்புடன் புனேவில் அமைந்துள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி உருவாக்கியுள்ள தடுப்பூசியை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் கேட்டு ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள கடிதம் பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசி கொண்டு வரப்பட வேண்டும். யாரோ காட்டும் அவசரத்தால், மருத்துவ சோதனைகளில் செய்யப்படும் சிறு சமரசம்கூட பேரழிவை ஏற்படுத்தும்.

பாரத் பயோடெக், ஜெய்தஸ் காடிலா ஆகிய நிறுனங்கள் மனிதர்கள் மீது சோதனைகளை நடத்துவதற்கும் அந்த மருந்துகளில் செயல்திறனை ஆய்வு செய்வதற்கும் மட்டுமே அனுமதி பெற்றுள்ளன. உலகளவில், கரோனாவைத் தடுக்க உருவாக்கப்பட்டுவரும் 12க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மனிதர்கள் மீதான சோதனைகளின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன.

சிலர் அடிப்படை மருத்துவ சோதனைகளில் சிறப்பாகச் செயல்பட்டாலும், வணிக பயன்பாட்டிற்கான அனுமதியை அவற்றால் பெற முடியவில்லை. உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், “சீனா தான் உருவாக்கும் தடுப்பூசிகளில் ஒன்றை தற்போது ராணுவ வீரர்களிடம் மட்டும் பயன்படுத்திவருகிறது. இந்த தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகளுக்குப் பிறகே, தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட வேண்டும். இதற்கு குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் ஆகும்” என்றார்.

ஹைதராபாத்தில் அமைந்துள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்தின் இயக்குநர், மனிதர்கள் மீது நடத்தப்பட வேண்டிய மூன்று கட்ட மருத்துவ சோதனைகளை முடிக்க ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஆகும் என்று தெரிவித்தார்.

நல்ல செயல்திறன் மிக்க ஒரு தடுப்பூசியை பாதுகாப்பாக உருவாக்கி, வைரஸ் தொற்று அதிகம் உள்ள பகுதிகளில், படிப்படியாக சோதனை செய்ய வேண்டும். அதன் பின் சோதனை செய்யப்பட்டவர்களின் உடல்நிலை சீரான இடைவெளியில் பரிசோதிக்கப்படும். இவை அனைத்தும் வெற்றிகரமாக முடியும்பட்சத்தில், உற்பத்தி மற்றும் விநியோகத்தை தேவைக்கேற்ப அதிகரிக்க முன்கூட்டியே முறையாக திட்டமிட்டிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

‘ஐசிஎம்ஆர் தனது நிலைப்பாட்டை மாற்றி, வெவ்வேறு கட்டங்களில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதன் மூலம் சோதனையை வேகமாக முடிக்கும் நோக்கத்துடனேயே அந்த அறிவிப்பை மேற்கொண்டதாகத் தெரிவித்தது. தற்போதைய நிலையில் தடுப்பூசி என்பது மனிதர்களுக்கு அதிமுக்கிய தேவையாக இருக்கும் நிலையில் ஆராய்ச்சியாளர்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சரியான முறையில் வழிநடத்த வேண்டும்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி; மனிதப் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்த ரஷ்யா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.