ETV Bharat / bharat

சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட இந்திய வீரர்கள் : இப்போதாவது மோடி மௌனத்தை கலைக்க வேண்டும்!

author img

By

Published : Jun 16, 2020, 7:57 PM IST

டெல்லி : நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகி இருக்கும் சீனாவின் எல்லை மீறிய ஆக்கிரமிப்பு குறித்த மத்திய அரசின் மௌனம் பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Breaking News

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் லடாக் பகுதி அருகே உள்ள கால்வான் ஆற்று பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் பாங்கோங் த்சோ ஏரி ஆகியவை சீன ராணுவத்தால் எல்லை மீறி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.

இந்தியாவின் ‘பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுடன்’ எந்த சமரசமும் இந்த விடயத்தில் செய்துகொள்ள முடியாது. கால்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங் த்சோ ஏரி பகுதி (லடாக்) ஆகிய பகுதிகளில் சீன ராணுவம் ஆயிரக்கணக்கான படைவீரர்களை நகர்த்தியதாக வெளியான அறிக்கைகள், நமது “பிராந்திய ஒருமைப்பாட்டை" உடைக்கும் துணிச்சலான முயற்சியாகவே கருத முடியும். அந்த செய்தி முழு தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில், இந்தோ-சீனா ('எல்லைக் கட்டுப்பாட்டு கோடு')எல்லையில் நமது வீரர்களில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. ஆனால், இன்று நண்பகல் முதல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் / செய்தித்தாள்களிலும் ஒரு இந்திய ராணுவ உயர் அலுவலர் மற்றும் இரண்டு வீரர்கள் சீனர்களால் கால்வான் ஆற்றுப் பள்ளத்தாக்கின் அருகில் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் அதிர்ச்சியூட்டுவதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளது.

இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய ராணுவம் இன்று பிற்பகல் 12.52 மணிக்கு வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கை (பின்னர் பிற்பகல் 1.08 மணிக்கு திருத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது) ஒவ்வொரு செய்தி நிறுவனமும் வெளியிட்டுள்ளது. அந்த செய்திகள் நமது நாட்டின் ராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை உரைக்கின்றன. நமது நாட்டின் துணிச்சலான உயர் அலுவர் மற்றும் இரு படை வீரர்கள், சீனர்களால் கொல்லப்பட்டதாக கூறும் அந்த அறிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஏற்றுக்கொள்ள முடியாதவற்றைப் பற்றி பேசுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் முழு தேசத்தின் துயரத்திற்கும் திகைப்புக்கும் பதில் அளிக்காமல் முற்றிலும் அமைதியாக இருக்கின்றனர். பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் இதற்கு முன் வந்து பதிலளிக்க வேண்டும்: -

1. கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தின் ஒரு அலுவலரையும் இரு வீரர்களையும் சீனர்கள் கொன்றது உண்மையா? இந்திய வீரர்களும் படுகாயமடைந்துள்ளனர் என்பது உண்மையா? அப்படியானால், பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஏன் மௌனமாக உள்ளீர்கள்?

2. கால்வான் பள்ளத்தாக்கில் நேற்று (ஜூன் 15) இரவு ‘சீனாவின் விரிவாக்க செயல்முறை’ நடந்து கொண்டிருந்தபோது, அங்கே பணியிலிருந்த இந்திய ராணுவ அலுவலர் மற்றும் 2 வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. கால்வான் பள்ளத்தாக்கில் உள்ள நமது எல்லைக்குள் இருந்து சீனர்கள் விலகுவதாகக் கூறினால், பின்னர் நமது படையினரும் ஏன் கொல்லப்பட்டார் என்று பிரதமரும் பாதுகாப்புத் துறை அமைச்சரும் தேசத்தின் பாதுகாப்பை நம்பும் மக்களுக்கு சொல்ல வேண்டும் ? எப்படி, எந்த சூழ்நிலையில் நமது அலுவலர் மற்றும் வீரர்கள் உயிரிழந்தார்கள் ? நேற்று இரவு நமது வீரர்கள் கொல்லப்பட்டிருந்தால், இன்று மதியம் 12.52 மணிக்கு அறிக்கை ஏன் வெளியிடப்பட்டது, 16 நிமிடங்களுக்குப் பிறகு 1.08 மணிக்கு அறிக்கை ஏன் மாற்றப்பட்டது?

3. பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் 2020 ஏப்ரல் / மே முதல் சீனர்களால் நமது பிரதேசத்தை ஆக்கிரமிப்பது குறித்து ஒரு புதிரான மௌனத்தை கடைப்பிடித்து வருகின்றனர். மேலும் எந்தவொரு கேள்விகளுக்கும் பொது களத்தில் பதிலளிக்க முன்வரமாட்டேன் என்கின்றனர். 2020 ஏப்ரல் / மே மாதத்திற்குப் பிறகும், நமது தேசத்தின் பகுதிகள் எவ்வளவு சட்டவிரோதமான முறையில் சீனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதையும், நமது துணிச்சலான அலுவலரைக் கொல்ல வழிவகுத்த சூழ்நிலைகள் என்ன என்பதையும் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் இப்போதாவது தேசத்திடம் தெரிவிக்க முன்வருவார்களா?

4. இந்தியாவின் ‘தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடும்’ கடும் பாதிப்புகளைக் கொண்டிருக்கும் இந்த சவாலான சூழ்நிலையை எதிர்கொள்ள மத்திய அரசு என்ன திட்டத்தை முன்மொழிய இருக்கிறது ? இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் நமது பிராந்திய ஒருமைப்பாட்டை அனைத்து வழியிலும் பாதுகாக்க ஒட்டுமொத்த நாடும் ஒன்றாக நிற்கிறது. அதே நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சியும் உறுதியாக உள்ளது. நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில், ‘ரகசியம் அல்லது மௌனம்’ என்பது இல்லை. அவற்றை நமது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதையும் மோடி அரசு நினைவில் கொள்ளட்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.