கத்ரி கோபால்நாத்
பத்மஸ்ரீ விருதுபெற்ற பிரபல இசைக் கலைஞர் கத்ரி கோபால் நாத் (69). இவரின் சொந்த ஊர் கர்நாடகாவின் தக்ஷிண கன்னடா மாவட்டம் பந்வால் தாலுகாவில் உள்ள சஜிபா மூடா கிராமம்.
இவரின் இசை சேவையைப் பாராட்டி, மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
அவர்களில் தந்தை வழியில் இசைப்பணியை மணிகாந்த் தொடர்கிறார். மற்றொரு மகன் குவைத்தில் உள்ளார்.
இந்த நிலையில் கத்ரி கோபால் நாத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மரணம்
இந்த நிலையில் அவர் இன்று மரணம் அடைந்தார். குவைத்தில் இருக்கும் அவரது மகன் வந்த பிறகு கோபால்நாத்துக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்படவுள்ளன. கோபால்நாத் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பதவினங்குடி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே