ETV Bharat / bharat

இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறதா? - இந்திய ரயில்வே

டெல்லி: தண்டவாளங்கள் பழுதுபார்ப்பு, ரயில்வே பாலங்கள் சீரமைப்பு, உணவு தரம், சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்கு இந்திய ரயில்வே முக்கியத்துவம் கொடுக்கிறதா என்பது குறித்த விரிவான தகவல் தொகுப்பு.

indian-railways
indian-railways
author img

By

Published : Mar 9, 2020, 7:40 AM IST

இந்திய ரயில்வே பயணிகளுக்கு அளிக்கும் பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கைகள், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிதிநிலை அறிக்கையில் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 2017-18ஆம் நிதியாண்டு தொடங்கி ஐந்து ஆண்டுகள் வீதம் ஓராண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை ரயில்வே பாதுகாப்பு நிதியான ராஷ்ட்ரிய ரயில் சன்ரக் ஷா கோஷிற்கு ஒதுக்குவதாக அறிவித்தார்.

அதற்காக மத்திய நிதி அமைச்சகம் முதலாம் ஆண்டில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் திரட்டியது. அதன் விளைவாக, ஒதுக்கீடுகள் கால் பகுதியாக குறைக்கப்பட்டுள்ளது என்றும், அதிலும் பாதித்தொகை மட்டுமே செலவழிக்கப்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எனவே அறிக்கையின்படி அத்திட்டம் நிறைவேறவில்லை. நிதி பற்றாக்குறை மட்டுமல்லாமல், புதிய வழித்தடங்களை அமைப்பதிலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. 2018-19ஆம் ஆண்டுகளில் ஆயிரம் கிலோமீட்டர் நீளமுள்ள புதிய வழித்தடங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்திருந்தபோது, அதில் 479 கிலோமீட்டர் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 2019-20ஆம் ஆண்களில் அந்த இலக்கு பாதியாகக் குறைக்கப்பட்டது. அப்படியிருந்தும் 278 கிலோமீட்டர் மட்டுமே முடிக்கப்பட்டது. எனவே நிதிகளின் பற்றாக்குறையால் பாதுகாப்புச் செலவு சுருங்கிவருகிறது என்பது தெளிவாகிறது.

வருமானத்தில் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் ரயில்வே வாரியம் 97 ரூபாயைய் செலவழிக்கிறது. தேவையற்ற செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், வருவாயை அதிகரிக்கும் வழிகளைக் கண்டறியவும் ரயில்வே வாரியத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு, ரயில்வேயின் நிதி நிர்வாகத்தில் முரண்பாடுகள் இருப்பதாக, அதன் தலைமை கணக்குத் தணிக்கையாளர் தெரிவித்திருந்தார்.

அதில், ரயில்வேயின் வருமான, செலவு விகிதம் 2017-18ஆம் ஆண்டில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. உண்மையில் இந்தக் கணக்கீடுகள் செய்யப்படும் நேரத்தில் தேசிய அனல் மின் கழகம், இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்திடமிருந்து ஏழாயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிதியை முன்கூட்டியே பெற்றிருந்தால், இயக்க விகிதம் 102.66 விழுக்காடாக இருந்திருக்கும்.

அடுத்தபடியாக இந்திய ரயில்வே, முக்கியமான சீரமைப்புகள், பழுதுபார்ப்புகளைத் தாமதப்படுத்துகிறது. காரணம் 60 விழுக்காடு பணியாளர்கள் பற்றாக்குறை. முக்கியமாக நாட்டில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே பாலங்கள் 100 ஆண்டுகளைக் கடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 2016-17 வரை, ரயில்வே மொத்த மூலதனத்தின் 11 விழுக்காடு உள்வளங்கள் மூலம் சேகரிப்பதாக இருந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அது 3.5 விழுக்காடாக குறைந்தது. அதனால் இந்தாண்டு அதனை 4.6 விழுக்காடாக உயர்த்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டம் எந்தளவு சாத்தியமானது என்று தெரியாது என்றாலும் ரயில் பயணங்கள் ஆபத்து குறைந்தாகவும், வசதியாகவும் மாற்றுமா என்பது சந்தேகமே. இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கலுக்கு 8.22 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க சாம் பிட்ரோடா குழு முன்மொழிந்தது.

ஆனால் தேசிய ரயில்வே அமைப்பு ஆண்டுக்கு 7,000 - 8,000 கோடி ரூபாய்கூட சேகரிக்க முடியாத நிலையில், அது சோதனையான காலத்தை எப்படி சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்களுடன் ஒவ்வொரு ஆண்டும் 800 கோடி பயணிகளை ஏற்றிச்செல்லும் இந்திய ரயில்வே, நமது நாட்டின் உயிர்நாடியாகும்.

பல ஆய்வுகள் ஒரு தரமான மாற்றத்தின் அவசியத்தை பலமுறை குறிப்பிட்டிருந்தாலும், அதனைச் செயல்படுத்துவதில் மந்தமான நிலையே தொடர்வது வருத்தமளிக்கிறது. அறுபத்து ஐந்து ஆண்டுகளாக உள்ள ரயில்வே, தனது உள்கட்டமைப்பில் வெறும் 30 விழுக்காடு வளர்ச்சியை மட்டுமே அடைந்திருக்கிறது என்ற அதிகாரப்பூர்வமான அறிக்கை, அதன் அலட்சியத்தைக் காட்டுகிறது.

தென் மத்திய ரயில்வேயில் மோசமான உணவு தரம், சுகாதாரம் குறித்து அளிக்கப்பட்ட புகார் எண்ணிக்கையை பார்க்கும்போது அது மற்ற ரயில்வே மண்டலங்களின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கிறது. குறைந்த தரம், தவறாகப் பயன்படுத்தப்படும் நிதி, பயணிகள் பாதுகாப்பில் சமரசம் உள்ளிட்ட ரயில்வேயின் மோசமான நிலைக்கு முக்கியக் காரணம் அரசியல் அமைப்புதான் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில், தேசத்தைக் கட்டமைப்பதில் ரயில்வேயின் முக்கியப் பங்கை மோடி அரசு சரியாக உணர்ந்து, அதில் முக்கியமான சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக தற்போதைய சமிக்ஞை (சிக்னல்) முறையை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2023-க்குள் அனைத்து தடங்களையும் மின்மயமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட ஐரோப்பிய ரயில்வே நெட்வொர்க்கின் ஒப்பீடு டென்மார்க்கில் பாதுகாப்பான ரயில்வே அமைப்பு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மறுபுறம் ஜப்பான் நேரம், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ரயில் நெட்வொர்க்கிற்கு புகழ் பெற்றுள்ளது. அமெரிக்காவும் சீனாவும் தண்டவாளங்களில் ஏற்படும் ஆபத்துகளை முன்கூட்டியே அறிந்து தடுக்கக்கூடிய செயற்கைக்கோள் சமிக்ஞை முறையைப் பயன்படுத்தி முன்னேறிவருகின்றன,

அவர்களுடன் ஒப்பிடும்போது, நமது ரயில்வே நெட்வொர்க் சரியான பாதுகாப்பின்மை, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இல்லாமை, மோசமான உணவு, சுகாதார சேவைகளுடன் உள்ளது. அத்தகைய சூழ்நிலையை மாற்ற வேண்டியது அரசுகளின் பொறுப்பு. சரியான சீர்த்திருத்தங்கள், வசதிகளுடன் இந்திய ரயில்வே பலப்படுத்தப்பட்டால், அது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் எனத் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பட்ஜெட்டில் ரயில் பயணிகள் வசதிக்கு ரூ.6,846 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.