ETV Bharat / bharat

இனி ரயில் ட்ரேக்கிங் ஈஸி - இஸ்ரோவுடன் இணைந்த இந்திய ரயில்வே! - ரீயல் டைம் ரயில் தகவல் அமைப்பு (Real-time Train Information System (RTIS

டெல்லி: இந்திய ரயில்வே துறையும், இஸ்ரோவும் இணைந்து ரீயல் டைம் ரயில் தகவல் அமைப்பு (Real-time Train Information System (RTIS)) என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளன.

ரயில்
ரயில்
author img

By

Published : Jan 25, 2020, 3:15 PM IST

ரயில்களை ட்ரேக்கிங் செய்வது இந்திய ரயில்வே துறைக்கு சவாலாக இருந்து வருகிறது. அதை எளிதாக்கும் வகையில், இந்திய ரயில்வே துறை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவுடன் இணைந்து புதிய முயற்சியை கையாண்டுள்ளது.

அதில், ரீயல் டைம் ரயில் தகவல் அமைப்பு (Real-time Train Information System (RTIS)) என்ற புதிய திட்டத்தின் மூலம் ரயில்களில் மின்சார என்ஜின்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரயில் நிலையத்திற்கு வரும் நேரம், ரயில் புறப்படும் நேரம், ஒவ்வொரு நிலையத்திற்கும் ரயில் பயணிக்கும் இடைவேளை, ரயிலின் வேகம், இருப்பிடம் ஆகிய அனைத்து தகவலையும் எளிதாக பெற முடியும். முதல்கட்டமாக இந்திய ரயில்வேயின் 2,700 மின்சார என்ஜின்களில் ஆர்டிஐஎஸ் (RTIS) பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய ரயில்வே அலுவலர்கள் கூறுகையில், இந்த வசதியானது முழுமையாக அனைத்து ரயில்களிலும் பொருத்தப்பட்டுவிட்டால், ஆர்.டி.ஐ.எஸ்-யை பயன்படுத்தி உருவாக்கப்படும் தகவல்களில் பயணிகளின் வசதிக்காக ரயில்களின் துல்லியமான இடம், வருகை நேரத்தை முன்னறிவிக்க செய்ய முடியும். மேலும், ரயில்களின் தாமதங்களை எளிதாக கண்டுபிடிக்கமுடியும்" என்றனர்.

இதையும் படிங்க: சுமார் 3 கோடி ஊழியர்கள் இபிஎஃப் திட்டத்தின் கீழ் இணைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.