ETV Bharat / bharat

இந்தியா முன் நிற்கும் மூன்று சவால்கள்- எதிர்கொள்வது எப்படி ? - எஸ் மகேந்திர தேவ் IGIDR

பொருளாதார மந்த நிலையில் ஊன்றிருக்கும் இந்தியா திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சமூகப் பொருளாதாரம், நிலையான எதிர்காலம் ஆகிய மூன்று சவால்களை எதிர்கொண்டுவருகிறது. இந்தச் சவால்களில் இருக்கும் சிக்கல்களையும் அதனை எப்படி அரசு சமாளிக்கலாம் என்பதையும் இந்தக் கட்டுரையில் அலரி ஆராய்கிறார் இந்திரா காந்தி இன்ஸ்டிடூட் அப் டெவலப்மென்ட் ரிசர்ச் கல்லூரியின் துணை வேந்தர் எஸ்ம கேந்திர தேவ்.

இந்தியப் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரம்
author img

By

Published : Jan 2, 2020, 10:23 AM IST

ஜனவரி 2019ஆம் ஆண்டு உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கையின்படி, எதிர்கால சாதனைகள் நேர்மறையான கண்ணோட்டத்தினை கொண்ட நுகர்வுகளின் அடிப்படையில் மூன்று முக்கிய சவால்களைச் சார்ந்திருக்கின்றன. திறன் மேம்பாடு மற்றும் வேலை வாய்ப்பு, கிராமப்புற இந்தியாவை உள்ளடக்கிய சமூகப் பொருளாதாரம், ஒரு ஆரோக்கியமான நிலையான எதிர்காலம் ஆகிய மூன்றும்தான் அந்தச் சவால்கள். இந்த அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து கடந்த ஓர் ஆண்டாக இந்த மூன்று சவால்களையும் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அதன் முன்னேற்றத்தையும் இங்கு ஆராய்ந்து பார்ப்போம்.

இச்சவால்கள் குறித்து ஆராய்வதற்கு முன்பு கடந்த ஓராண்டில் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியைக் காண்பது அவசியம். 2018-2019ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.0 சதவீதமாக இருந்த வளர்ச்சியானது, 2019-2020ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்தது. அது மேலும் சரிந்து இரண்டாம் காலாண்டில் 4.5 சதவீத அளவிற்குச் சரிந்தது.

உலக பொருளாதார மன்றத்தின் ( World Economic Forum) அறிக்கைபடி, இந்தியாவின் வளர்ச்சி வீதம் 2019இல் 7.5 சதவீதம் இருக்கும் என கணிக்கப்பட்டது. காரணம், இந்திய பொருளாதார வளர்ச்சி உலக பொருளாதார வளா்ச்சியின் துாண்டுகோலாக அமைந்திருந்தது. அத்தகைய கணிப்புக்கு மாறாக 2019-2020இல் இந்திய பொருளாதார வளர்ச்சியானது 5 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய பொருளாதார காரணங்கள் மட்டுமன்றி உள்நாட்டுக் காரணிகளும் இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான பிரச்னைகள், 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிகளின் செயல்திறனற்ற சொத்துகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களில் ஏற்பட்ட நெருக்கடிகள், கிராம வருமானங்களில் ஏற்பட்ட தேக்கநிலை ஆகியவையே பொருளாதார மந்த நிலைக்கு காரணமாகும். இந்திய பொருளாதாரம் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. ஆனால், இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை பற்றி நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் இது ஒரு மந்த நிலையே தவிர சரிவு நிலை (Recession) அல்ல. இந்த மந்த நிலையில் ஓராண்டிற்குப் பிறகே ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என பொருளாதார வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர்.

1. திறன் மேம்பாட்டுப் பயிற்சி

இப்பிரச்னையின் முதல் சவாலான திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு ஆகியவற்றை பொறுத்தவரை NSSOவின் 2017-2018ஆம் ஆண்டு அறிக்கை குறிப்பிடத்தக்க காரணங்களை எடுத்துக் கூறியிருக்கிறது. வேலைவாய்ப்பின்மையானது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், உழைப்பில் பெண்களின் பங்கு பெருமளவு குறைந்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2004-2005ஆம் நிதியாண்டில் 42 சதவீதமாக இருந்து பெண்களுக்கான வேலைவாய்ப்பு, 2017-18இல் 22 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இருந்தும், 85-90 சதவீத பெண் தொழிலாளர்கள் முறைசாரா துறைகளில் பணியாற்றிவருகின்றார்கள். ஆகவே, முறையான துறைகளில் விரிவாக்கத்தில் கவனம் செலுத்தும் அரசு, முறைசாரா துறைகளிலும் உற்பத்தியை பெருக்க வேண்டும். மக்கள்தொகைப் பெருக்கத்தின் அதிக எண்ணிக்கை, தொழிலாளர் சக்தி உருவாக்கத்துக்கு வித்திடும் என்பது அனைவரும் அறிந்ததே. உலகத்தில் பிற நாடுகளில் வயதானோர் எண்ணிக்கை கூடும் அதேநேரத்தில், நமது நாட்டில் தொழிலாளர் சக்தி பெருகுவது என்பது ஒரு சாதகமான சூழலேயாகும். மக்கள்தொகை ஈவை நாம் பெறவேண்டுமானால் மக்கள் அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு பயிற்சி அளித்தல் வேண்டும்.

இத்தகைய மக்கள்தொகை ஈவானது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அதிக வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கும் தென் மாநிலங்களின் ஈவு குறைவாகவும் வடமாநிலங்களின் ஈவு அதிகமாகவும் இருக்கும். தொழிலாளர்களிடையே காணப்படும் திறன் குறைபாடு அனைவரும் அறிந்ததே. மற்ற நாடுகளில் 70-80 சதவீத தொழிலாளர்கள் முறையான திறன் பயிற்சி பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் வெறும் 2.3 சதவீதம் தொழிலாளர்களே முறையான பயிற்சி பெற்றுள்ளனர். அதாவது இந்தியாவில் திறன் பயிற்சியில் மந்தமான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் திறன் வளர்ச்சி நிலத்தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தேசிய அளவிலான நிறுவன கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தனியார் தொழிற்சாலைகளின் பங்களிப்பு பெருமளவில் வரவேற்கப்படுகிறது. திறன் மேம்பாட்டுப் பணிக்குழுக்கள் மாநில அளவில் உருவாக்கப்பட்டு அவற்றை 17 மத்திய அரசுத் துறைகள் மேம்படுத்த உதவி புரிகின்றன. இதுதொடர்பாக நிறைய செய்யப்பட்டிருந்தாலும், அடிமட்ட அளவில் சம்பந்தப்பட்ட அனைவரின் சம பங்களிப்போடு அனைத்து திட்ட முறைகளையும் நிரல்களையும் செயல்படுத்துவதற்கான முனைப்பு அவசியம்.

இத்தகைய திறன் மேம்பாட்டு விடயத்தில் சீனாவின் அனுபவம் இந்தியாவிற்குச் சிறந்த பாடமாக அமையும். 1996ஆம் ஆண்டு சீனாவில் இயற்றப்பட்ட தொழிற்கல்வி சட்டமானது ஒரு சரித்திர முக்கியம்வாய்ந்த நடவடிக்கையாகும். இதன் அடிப்படையில் சீன தொழில்நுட்ப, தொழிற்கல்வி, பயிற்சிமுறை ஆகியவை உருவாக்கப்பட்டன. சீனப் பொருளாதாரத்திற்கே உரிய பல குணாதிசயங்கள் உண்டு. அதனடிப்படையில் உள்ளூர் நிலையிலேயே திறன் வளர்ப்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கான மாற்றத்தையும் நெகிழ்வையும் கொண்டுள்ளன.

மேற்கூறிய சட்டமானது கல்வியையும் பயிற்சியையும் ஒன்றிணைக்கும் அம்சங்கள் கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் தொழிற்சாலை நடைமுறைகளில் உள்ளூர் நிறுவன பங்களிப்பையும் உறுதிசெய்கிறது. மேலும், கிராமப்புறத்தில் இளைஞர்களுக்கு தொழிற்கல்வியோடு கூடிய பயிற்சி வழங்கப்படுகிறது.

இது போலவே வேறு சில நாடுகளிலும் தொழிற்கல்வியோடு கூடிய பயிற்சி வழங்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனியைக் கூறலாம். இதுபோன்றதொரு இந்திய சட்டம் திறன் பயிற்சி குறைகளின் மீது கவனம் செலுத்துவதாக இருத்தல் வேண்டும்.

ஒருபுறம் மத்திய, மாநில அரசுகளின் குறிப்பிட்ட பொறுப்புகளையும், மறுபுறம் திறன் பயிற்சி நிலையங்களும் தொழிற்சாலைகளும் ஏற்க வேண்டிய பொறுப்புகளையும் வரையறைப்படுத்த வேண்டும். தென் கொரியா போன்ற நாடுகள் மேம்பட்ட திறன் பயிற்சிகளோடு தரமான பொதுக் கல்வியையும் வழங்கிவருகின்றன. இந்தப் பிரச்னையையும் நம் நாட்டு சட்டங்கள் கருத்தில்கொள்ளுதல் வேண்டும். ஆகவே, மக்கள் தாங்கள் பெறுகின்ற திறன் பயிற்சிகளைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் தரமான பொதுக்கல்வியும் இந்திய மக்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.

2. சமூகப் பொருளாதாரம்

இரண்டாவது சவாலானது, கிராமப்புற இந்தியாவை உள்ளடக்கிய சமூகப் பொருளாதாரம். கடந்த ஓராண்டாக கிராம வருமானங்களிலும் ஊதியங்களிலும் மந்தநிலை காணப்படுகிறது. உள்கட்டமைப்பு முறைப்படுத்துதல், வலைதளம் நிதி ஆதாரம் போன்றவற்றில் கிராமப்புறம் / அரை-நகர்ப்புறம் ஆகியவற்றிற்கு இடையேயான இடைவெளியை நீக்கி இணைக்க வேண்டியது தற்போதைய தேவையாகும்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அரசு ஒதுக்கியுள்ள ரூ. 100 லட்சம் கோடி முக்கிய நடவடிக்கையாகும். ஆனால், இது குறித்த விளக்க அறிக்கை தேவை. இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது அரசின் கவனம் கிராமப்புறம் / அரை-நகர்ப்புறங்களின் மீது இருத்தல் வேண்டும். இப்பகுதி மக்கள் பயனடையும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக அரசு உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு இணைப்புகளையும், சௌபாக்யா யோஜனா திட்டத்தின் மூலம் மின் இணைப்புகளையும், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சுகாதாரமான சூழலையும் வழங்கிவருகிறது. சமூகத்தில் பின்தங்கிய, பாதிக்கப்படக்கூடிய மக்கள் குறிப்பாக பெண்கள் இத்திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையானது 2022ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் மின் இணைப்பும், சமையல் எரிவாயு இணைப்பும் வழங்க உறுதியளித்துள்ளது. இந்த அறிவிப்பின் முன்னேற்றத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளில் காணலாம். கிராமப்புறங்களை உள்ளடக்கிய சமூகப் பொருளாதாரம் என்பதில் தற்போது தகவல் தொழில்நுட்பமும் அடங்கும். இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'டிஜிட்டல் இந்தியா' திட்டம் மூலம் அரசின் அனைத்துத் திட்டங்களும் மின்னணு தகவல்தொடர்பு மூலம் சென்றடைய தேவையான வலைதளத் தொடர்பை மேம்படுத்தி டிஜிட்டல் இந்தியாவை அதிகாரப்படுத்த வேண்டும்.

இந்த முயற்சியின் மூலம் தொலைதுார கிராமங்களையும் அதிவேக வலைதள் இணைப்புகள் மூலம் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதில், பெரும் முன்னேற்றம் கண்டபோதிலும் வலைதள வசதிகள் பெறுவதில் இன்றளவும் பல சிரமங்கள் உள்ளன. கிராமப்புறங்களில் ஏற்படுத்த வேண்டிய நிதி ஆதாரங்களைப் பொறுத்தவரை மத்திய அரசின் 'பிரதம மந்திரி ஜன் யோஜனா' திட்டம் பெரும் பங்காற்றிவருகிறது. 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாத புள்ளி விவரப்படி, இத்திட்டதின் மூலம் 37.1 கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் 1.02 லட்சம் கோடி ரூபாய் வைப்புகளாக உயர்ந்துள்ளது.

இதில் 59 சதவீத வங்கிக் கணக்குகள் கிராமப்புறங்களிலும், அரை-நகரப்புறங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த வங்கிக் கணக்குளின் பயன்பாடு கடந்த இரண்டு ஆண்டுகளில் தேக்கநிலையை அடைந்ததற்கான காரணம், அரசு அறிவித்த குறைந்தபட்ச வங்கி இருப்பே ஆகும். தேசிய நிதிச் சேர்க்கை ஆலோசனைக் குழுவின் துணையோடு 2019-2024ஆம் ஆண்டுகளுக்கான ஒரு தேசிய நிதிச் சேர்க்கை யுக்தி உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனாக கிராமப்புறங்களை நிதி சேர்க்கையில் ஈடுபடுத்துவது மேலும் உயரும் என நம்புவோம்.

3. நிலையான எதிர்காலம்

மூன்றாவது சவால், ஒரு ஆரோக்கியமான நிலையான எதிர்காலம். ஐநா சபை உருவாக்கிய SDGயின் சூழலில் இது முக்கியம் பெறுகின்றது. மக்கள்தொகை நெருக்கடி மாசு, சுகாராதமற்ற தன்மை ஆகியவை ஆபத்தான முறையில் உயர்ந்துவருகிறது. இப்பிரச்னை நகர்ப்புறங்களில் மிகவும் கடுமையாகி உள்ளது. சமீபத்திய மதிப்பீடுகளின் படி 63 சதவீத இறப்புகள் தொற்றா நோய்கள் மூலமே ஆபத்தான முறையில் உயர்ந்துவருகின்றன.

மத்திய அரசின் 'பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா' மூலம் 10 கோடி குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வீதம் மருத்துவக் காப்பீடு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மதிப்பீட்டின்படி, இத்திட்டத்தைச் செயல்படுத்த சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். தேவையான நிதியோடு ஒப்பிடும்போது ஒதுக்கப்பட்ட நிதியானது மிகவும் குறைவாகும்.

சுகாதார மேம்பாடு திட்டத்தில் ஒரு முக்கியமான அங்கம் மருத்துவப் பாதுகாப்பு என்பது மறுக்கமுடியாது. ஆனால், அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு என்பதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். பொதுச் சுகாதாரச் செலவினங்களுக்கான அதிக நிதி ஒதுக்கீடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான அடிப்படை வசதிகள், மறுசீரமைப்பு ஆகியவை அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பை நோக்கி நகர்வதற்கான தேவைகளாகும். இத்தகைய நடவடிக்கைகள் அனைவரும் அணுகக்கூடிய மலிவான, ஆனால் தரமான சுகாதாரப் பாதுகாப்பை உறுதிசெய்யக்கூடும்.

அடுத்து, நம்மை அச்சுறுத்தும் நெருக்கடிகளான காற்று - நீர் மாசு, குப்பை மேலாண்மை, நகர மக்கள் தொகை நெருக்கடி போன்றவற்றில் அரசு கவனம் செலுத்த வேண்டும். சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வில் இந்தியாவுக்கு நீண்ட சரித்திரம் உண்டு. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை இயற்றியும் விதிமுறைகளை வகுத்தும் தற்போதைய சீர்திருத்தங்களுக்கு முந்தைய காலமான 1974ஆம் ஆண்டு முதலே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சமீபத்தில் மத்திய அரசு மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளோடு சேர்த்து பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களைச் சந்திப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. 'நமாமி கங்கை' திட்டத்தின் மூலம் அரசு இத்துறையில் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒரு சான்றாகும். அதுபோலவே சுற்றுச்சூழல் தொடர்பான விதிமுறைகள் பிற நாடுகளில் உள்ளது போன்ற கடுமையான சட்டங்களுக்கு இணையாகவே உள்ளன. ஆனாலும், மேற்படி சட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் கட்டாயப்படுத்தி ஏற்றுக்கொள்ள வைப்பதிலும் சுணக்கம் காட்டப்படுகிறது.

இதன் விளைவாக, நீர்-காற்று மாசுபாடுகள் சுற்றுச்சூழலைப் பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளன. தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசானது ஒவ்வொரு ஆண்டும் அபாய அளவைத் தாண்டிச் செல்கிறது. இத்தகைய காற்று மாசுக்கு முக்கியக் காரணம் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அறுவடைக்குப் பிந்தைய பயிர் குப்பைகளை எரித்தலேயாகும். இதற்கான மாற்று வழிகளை நாம் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தல் வேண்டும்.

டெல்லியில் ஏற்படும் மாசு சீர்கேடுகளுக்கு தொழிற்சாலைகள், வாகனங்கள், கட்டுமான மாசு முதலியனவும் காரணங்களாகும். சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் மாநரகங்களில் காணப்படும் காற்று மாசு, குப்பை மேலாண்மை தொடர்பான நடவடிக்கைகளின் மூலம் நாம் கற்றுக்கொள்ளக் கூடியவை அதிகம்.

சுற்றுச்சூழல் தொடர்பான கொள்கைகள் ஓரளவே வெற்றி பெறுவதற்கான முக்கிய காரணங்கள் நிறுவன தோல்வியும், பொதுமக்களின் ஆர்வமின்மையுமேயாகும். ’என் வீடு பாதிக்கப்படவில்லை’ என்ற மக்களின் மனப்பாங்கும் இதுபோன்ற மாசுப் பிரச்னைகளுக்கு காரணமாகும். ஒருபுறம் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும் அரசு அலுவலர்கள் வரும்முன் காத்தல் நலம் என்பதை மனதில்கொண்டு துடிப்பாக பங்காற்றிடல் வேண்டும். மறுபுறம் பொதுமக்களும் ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து இத்தகைய சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தீர்ப்பதில் முழுமனதோடு ஈடுபடுதல் வேண்டும்.

ஒத்துழைப்பு தேவை

முடிவாக, கடந்த ஓராண்டாகவே பொருளாதார வளர்ச்சியும் நுகர்தலுக்கான வளர்ச்சியும் கூறப்பட்டுள்ள மூன்று சவால்களை சந்திப்பதில் கலவையான ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தியுள்ளன. வேலைவாய்ப்பில் சரிவு ஏற்பட்டதனால் வேலைவாய்ப்பின்மையில் ஏற்றம் காணப்படுகிறது. அதே சமயம் கிராமப்புறங்களில் சமையல் எரிவாயு விநியோகத்தில், மின் இணைப்புகள் வழங்குவதில் பொருளாதார முன்னேற்றம், குறைவான மக்களே வெளியிடங்களில் மலம் கழிப்பது போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

சுகாதரத் துறையின் மீதான கவனம் அதிகரித்திருக்கும் வேளையில், தொற்றா வியாதிகள் அதிகரித்து காணப்படுகின்றன. எனவே அனைவருக்கும் பாதுகாப்பான சுகாதாரம் வழங்குதல் அவசியம். சுற்றுச்சூழல் கேடு, மாசு இவற்றின் அளவு உயர்ந்துவருவது போல் தோன்றினாலும் அவற்றைப் பற்றிய விழிப்புணர்வும் உயர்ந்துள்ளது என்பது கண்கூடு.

இந்தியா ஒரு பெரிய நாடு என்பதனால் ஒவ்வொரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்னைகள் மாறுபடுகின்றன. ஆகவே, மத்திய அரசு நிலையில் மட்டுமன்றி மாநில அரசுகள் நிலையிலேயும் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமே மேற்கூறிய மூன்று அபாயகரமான சவால்களையும் சமாளிக்கமுடியும்.

ஒரு நடுத்தர கால திட்டத்தின் மூலம் இச்சவால்களை சமாளிக்கும் இலக்கை அடைந்து உயர்வான நுகர்தல் வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் முதலியவற்றை அடையமுடியும். விவசாய வளர்ச்சிக்கான சவாலையும் மேற்கூறிய மூன்று சவால்கலோடு இணைத்தல் வேண்டும். ஏனெனில் நுகர்வில் முன்னேற்றம் காண்பதற்கு விவசாய வருமானங்கள் அவசியமாகும்.

இதையும் படிங்க : பொருளாதாரம் குறித்து ப. சிதம்பரத்தின் பிரத்யேக பேட்டி!

Intro:Body:

Indian Economy

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.