ETV Bharat / bharat

வழித்தவறிய சீனர்கள்: வழியனுப்பி வைத்த இந்திய ராணுவம்...! - சீன எல்லை

சிக்கிம்: வழித்தவறி வந்த சீன நாட்டினருக்கு உணவு, மருந்து, உடை ஆகியவை வழங்கிய இந்திய ராணுவத்தினர், அவர்களை வழி அனுப்பி வைத்தனர்.

Indian Army rescues Chinese citizens in north Sikkim

author img

By

Published : Sep 5, 2020, 3:59 PM IST

இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறி நுழைந்துவருகிறது. அதனால் அவ்வப்போது எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது. இதனிடையே, இந்த பிரச்னை குறித்து சீன - இந்திய ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தையும் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (செப். 3) வடக்கு சிக்கிமின் பீடபூமி பகுதியில் 17ஆயிரத்து 500 அடி உயரத்தில் வழி மாறிப்போன சீன நாட்டினர் மூன்று பேரை, இந்திய ராணுவத்தினர் மீட்டனர். குளிரால் பாதிக்கப்பட்ட அந்த சீனர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளனர்.

இதையடுத்து, அந்த மூன்று சீனர்களுக்கும் இந்திய ராணுவம் ஆக்ஸிஜன், உணவு, ஆடைகள் உள்ளிட்டவற்றை கொடுத்து சரியான பாதையை காண்பித்து வழியனுப்பி வைத்தனர். இதற்காக அந்த சீனர்கள், இந்திய வீரர்களுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இதையும் படிங்க...2019இல் 24,000 பேர் ரயில் சார்ந்த விபத்துகளில் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.