இதுகுறித்து விமானப்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய விமானப் படையில் ஏர்மேன் பணிக்கான தேர்வு முகாம் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் உடற்கல்வி துறை உள் அரங்கில் அக்டோபர் 17 மற்றும் 21ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க இளநிலை பட்டம் பெற்றவராக இருந்தால் 1995 ஜூலை 19 முதல் 2000 ஜூலை 1-க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும். முதுநிலை பட்டம் பெற்றவராக இருந்தால் 1992 ஜூலை 19 முதல் 2000 ஜூலை 1க்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பி.ஏ. - பி.எஸ்சி. - பி.சி.ஏ. பட்டம் பெற்றிருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண்ணுடன் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
இதேபோல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் எம்.ஏ. ஆங்கிலம் உளவியல் எம்.எஸ்சி. - எம்.சி.ஏ. பட்டத்துடன் 50 சதவீத மதிப்பெண்ணும் பி.எட். பட்டமும் பெற்றிருக்க வேண்டும். இதில் விண்ணப்பதாரர்கள் திருமணமானவராக இருந்தால், 22 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
அக்டோபர் 17ஆம் தேதி – தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
அக்டோபர் 21ஆம் தேதி – கேரளா, லட்சத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
தேர்வில் கலந்துகொள்வோர் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும். அசல் சான்றிதழ்கள் கல்லூரியில் இருந்தால், அதுகுறித்து பள்ளி/கல்லூரி முதல்வரின் சான்றிதழுடன் கூடிய சுய கையொப்பம் இட்ட நகல் சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் விபரங்களை www.airmenselection.cdac.in என்ற இணைய பக்கத்திலும் 044 - 2239 0561, 2239 5553 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் அல்லது co.8asc-tn@gov.in என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம். தேர்வு முகாம் நடைபெற ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.