பிரிட்டிஷ் அரியணையின் வாரிசான இளவரசர் சார்லஸ் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும், இந்த பயணம் நிலையான சந்தைகள், காலநிலை மாற்றம் மற்றும் சமூக நிதி ஆகியவற்றை மையமாகக் கொண்டது எனவும் அவரது அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது.
70 வயதான இளவரசர் சார்லஸ் நவம்பர் 13ஆம் தேதி புதன்கிழமை இரண்டு நாள் பயணமாக இந்தியா வரவுள்ளார். இது சார்லஸின் 10ஆவது அதிகாரப்பூர்வ இந்தியா பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணம்