ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் 81 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கரோனா செய்திகள்

இன்றைய (அக்.31) நிலவரப்படி இந்தியாவில் 81 லட்சத்து 37 ஆயிரத்து 119 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

India tracker
India tracker
author img

By

Published : Oct 31, 2020, 12:42 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 48 ஆயிரத்து 268 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 551 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்:

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 81 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 81 லட்சத்து 37 ஆயிரத்து 119 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஐந்து லட்சத்து 82 ஆயிரத்து 649 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 74 லட்சத்து 32 ஆயிரத்து 829 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 641 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்:

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (அக்.31) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 67 ஆயிரத்து 976 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் 10 கோடியே 87 லட்சத்து 96 ஆயிரத்து 064 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏற்கனவே 7,000 டன்... தீபாவளிக்கு முன்பு 25,000 டன் வெங்கயம் இறக்குமதி! - மத்திய அமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.