ஆப்கானிஸ்தானுக்கு நன்கொடையாக மேலும் 75 ஆயிரம் டன் கோதுமையை இந்தியா வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானுக்கு 75 ஆயிரம் டன் கோதுமை அனுப்பிவைக்கப்படும் என இந்தியத் தூதர் வினய் குமார் தகவல் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் (ARCS) சிறப்பு வாரத்தின் 37ஆவது ஆண்டு விழாவில் பேசும்போது இந்தியத் தூதர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். இந்தியா தனது முதல் கோதுமை சரக்குகளை 2017 அக்டோபரில் பாகிஸ்தானைத் தவிர்த்து ஈரானில் உள்ள சபஹார் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. ஆப்கானிஸ்தான் மக்களுக்கு 1.1 மில்லியன் டன் கோதுமையை இந்திய அரசு மானிய அடிப்படையில் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.