15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, ஃபிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சபையில் பிராந்திய அடிப்படையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
இந்தத் தற்காலிக உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இந்த 10 இடங்களில் ஐந்து இடங்களுக்கு ஆண்டுதோறும் தேர்தல் நடப்பது வழக்கம்.
இந்தாண்டு தேர்தல் அமெரிக்காவிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் நேற்று நடந்தது. கரோனா நெருக்கடி காரணமாக 193 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் இந்தியா ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
15 உறுப்பினர்களும் தலைவர் பதவியை சுழற்சி முறையில் வகிப்பார்கள். அந்த வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அடுத்த ஆண்டு (2021) ஆகஸ்ட் மாதத்திலும், 2022ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு மாதம் தலைமை தாங்கும்.
2021 ஜனவரியில் துனிசியா கவுன்சிலின் தலைவராகத் தொடங்கும். அதன்பிறகு இங்கிலாந்து, அமெரிக்கா, வியட்நாம், சீனா, எஸ்தோனியா, ஃபிரான்ஸ், இந்தியா, அயர்லாந்து, கென்யா, மெக்ஸிகோ, நைஜர் ஆகிய நாடுகள் தலா ஒரு மாதம் பதவி வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினரான இந்தியா!