துருக்கி அதிபர் எர்டோகன் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு இரு நாடுகளும் ஒன்றாக சேர்ந்து கூட்டறிக்கை வெளியிட்டது. அதில், "காஷ்மீர் விவகாரத்தை அமைதி பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் தீர்த்துக் கொள்ள வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தைப் பின்பற்ற வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இந்திய தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், "இந்தியாவின் ஒன்றிணைந்த பகுதியான காஷ்மீர் குறித்து ஒப்பந்தத்தில் இடம்பெற்றதை, இந்தியா நிராகரிக்கிறது. நாட்டின் உள்விவகாரங்களில் துருக்கி தலையிடக் கூடாது. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு விடுக்கப்படும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து புரிதல் துருக்கிக்கு இருக்க வேண்டும்" என்றார்.
காஷ்மீர் பிரச்னை நாட்டின் உள்நாட்டு விவகாரம் என இந்தியா தொடர்ந்து தெரிவித்து வந்தது. பாகிஸ்தானை தவிர்த்து மற்ற சார்க் நாடுகள் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஞ்சாயத்து தேர்தலில் பஞ்சாயத்து செய்த உச்ச நீதிமன்றம்!