இந்தியாவில் கரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 128ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது மூன்றாக உயர்ந்துள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மார்ச் 31ஆம் தேதிவரை மூடப்பட்டுள்ளன. கரோனா வைரஸ் தாக்கம் இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாகத் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி தொடங்கி சர்வதேச நிறுவனங்கள் தொடர் எச்சரிக்கையை தெரிவித்துள்ளன.
கரோனாவால் இந்தியப் பொருளாதாரத்திற்கு வரப்போகும் பாதிப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே நாட்டில் மந்தநிலை நிலவிவரும் நிலையில் இப்போது நோய் பாதிப்பு இந்தியப் பொருளாதாரத்திற்கு கூடுதல் சுமையை தரும் எனவும், இதை தான் தொடர்ச்சியாக எச்சரித்துவருவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார தலைநகராகக் கருதப்படும் மகாராஷ்டிரா கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் மகாராஷ்டிராவில் நோய் பாதிப்பிற்குள்ளாகியுள்ள நிலையில், ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன் நேரடி விளைவு பொருளாதாரத்தை பாதிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவை கொண்டுவந்தது ராகுல்தான் - வி.எச்.பி. தலைவர் சர்ச்சைப் பேச்சு