ETV Bharat / bharat

ஒரேநாளில் 227 பேருக்கு கரோனா: பலி எண்ணிக்கை 32ஆக அதிகரிப்பு!

ஒரேநாளில் புதிதாக 227 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251ஆக அதிகரித்துள்ளது.

india-reports-227-new-coronavirus-cases-in-biggest-single-day-spike-toll-reaches-32

author img

By

Published : Mar 31, 2020, 8:09 AM IST

கரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டே போகிறது. நேற்று மட்டும் இந்தியாவில் புதிதாக 227 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இது ஒருநாளில் கண்டறியப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதனால் இந்தியாவில் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1251ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 102 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 1117 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 202 பேரும், மகாராஷ்ட்டிராவில் 198 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக உள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், ''இந்தியாவைப் பொறுத்தவரையில் கரோனா வைரஸ் சமூகத் தொற்றாகப் பரவவில்லை. சமூகப் பரலாக மாறினால் உடனடியாக மக்களுக்கு தெரிவிக்கப்படும். கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000ஆக வருவதற்கு 12 நாள்களாகியுள்ளதால், இதுவரை சமூகப் பரவலாக மாறவில்லை என்று கூறலாம்.

இந்தியாவைவிட வளர்ந்த நாடுகளாகப் பார்க்கப்படும் இடங்களில் 12 நாள்களில் கரோனாவின் பாதிப்பு அதிகளவில் இருந்துள்ளது. இதனால் கரோனா பாதிப்பு இதுவரை அந்தந்த இடங்களுக்குள்ளேதான் உள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிழைப்புக்காக வந்த மக்கள் மீது ரசாயனத்தைப் பீய்ச்சி அடித்த கொடூரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.