நாடு முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தாலும், தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தொழில் நடவடிக்கைகள் மீண்டும் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளதால், பொதுவெளியில் மக்களின் நடமாட்டம் இரண்டு மாதங்களுக்குப் பின் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவருகிறது.
அதேவேளை, கரோனா பாதிப்பு எண்ணிக்கையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிப்பதும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மும்பை, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களிலுள்ள அரசு மருத்துமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை வசதியில்லாத, நெருக்கடி நிலை தற்போது ஏற்படத் தொடங்கியுள்ளது.
நேற்று ஒரே நாளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,887ஆக பதிவாகிள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2.36 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன்மூலம், கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இத்தாலியைத் தாண்டியுள்ள இந்தியா, நோய் பாதிப்பில் தற்போது உலகளவில் ஆறாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க: 5 நாள் உணவு, குடிநீர் மறுப்பு; மருத்துவமனையில் முதியவருக்கு நேர்ந்த கொடூரம்