ETV Bharat / bharat

'நமது தேவை வெறும் தலைப்புச் செய்திகள் அல்ல' - கவுசிக் பாசு

உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார வல்லுநர் கவுசிக் பாசுவுடன் நமது ஈநாடு இணை ஆசிரியர் என்.ஸ்வா பிரசாத் நடத்திய நேர்காணலில் அவர், இந்தியா தற்போது சந்தித்துவரும் பொருளாதார மந்தநிலை குறித்தும் அதிலிருந்து எப்படி மீண்டுவரலாம் என்பது குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார். அதன் தமிழாக்கம் இதோ...

Kaushik Basu
Kaushik Basu
author img

By

Published : Jul 14, 2020, 6:31 PM IST

2020ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 1979ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.2 விழுக்காடு குறைவாக இருக்கும். சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில், இதுதான் மிகக் குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியாக இருக்கும் என்றும் பேராசிரியர் கவுசிக் பாசு தெரவித்துள்ளார்.

பிளவுபடுத்தும் அரசியல் எழுச்சியடைந்துள்ளது குறித்தும், அறிவியலைப் பின்னுக்குத் தள்ளும் போக்கு குறித்தும் கவுசிக் பாசு கவலை தெரிவித்துள்ளார். மேலும், உலகின் பல தோல்வியுற்ற நாடுகள் செய்தது போல விமர்சனங்களை ஒட்டுமொத்தமாக நிரகரிக்கும் தவறை இந்தியா செய்யக் கூடாது என்றார்.

பேராசிரியர் கவுசிக் பாசு 2012 முதல் 2016 வரை உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநராக இருந்தார். மேலும், இவர் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியவர். தற்போது, அவர் ​​அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பேராசிரியராகவும் உள்ளார்.

ஈநாடு இணை ஆசிரியர் என்.ஸ்வா பிரசாத்துடனான நேர்காணல்

கேள்வி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2019-20ஆம் ஆண்டில் 4.2% ஆக குறைந்துள்ளது இது 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த வளர்ச்சி விகிதம். மேலும், நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் மூன்று முதல் ஐந்து விழுக்காடு வரை சரிவைச் சந்திக்கும் என்று பல மதிப்பீட்டு நிறுவனங்கள் கணித்துள்ளன. மறுபுறம், கோவிட்-19 தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாம் இப்போது எந்தளவுக்கு ஒரு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம்? தற்போதைய நெருக்கடி நிலை எவ்வளவு மோசமாக உள்ளது?

இந்தியாவின் பொருளாதார நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது. மந்த நிலையின் ஒரு பகுதி புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில், கோவிட்-19 தொற்று காரணமாக உலகம் முழுவதும் ஒரு மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல, உலகெங்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது பொதுவாக ஒரு நாட்டின் தரத்தைக் குறைக்காது.

ஆனால், சமீப காலங்களாகவே, இந்தியா கிட்டத்தட்ட அனைத்து சர்வதேச மதிப்பீடுகளிலும் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. 43 முக்கியப் பொருளாதாரங்கள் குறித்த எகனாமிஸ்ட் பத்திரிகை, ஒவ்வொரு வாரமும் பொருளாதார வளர்ச்சி குறித்த தரவரிசையை வெளியிடும். பல ஆண்டுகளாக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இந்தியா முதல் மூன்று இடத்திற்குள் இருந்தது. ஆனால், தற்போது இந்தியா 23ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் இந்தப் பெரும் மந்த நிலை என்பது தொற்று பரவலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஊரடங்கு செயல்படுத்தப்பட்ட விதம் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கியுள்ளது. ஊரடங்கிற்குப் பின்னர், இந்தியாவின் வேலையின்மை விகிதம் 20 விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்துள்ளது. இது உலகில் மற்ற அனைத்து நாடுகளையும்விட அதிகம்.

இந்தியா வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்பதே அனைத்துக் இந்திய குடிமகனின் விருப்பம். அதனால், இப்போதிருக்கும் நிலை எனக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. அரசியல் தொடர்பான விஷயங்களில் எனக்கும் அரசுக்கும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், அதையும் மீறி, இந்த அரசு பொருளாதார வளர்ச்சியை வழங்கும் என்பது எனது எதிர்பார்ப்பாக இருந்தது. எனவே, இந்தியாவின் தற்போதைய செயல்திறன் எனக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

நமது நாட்டில் இருக்கும் அடிப்படை கட்டுமானம், திறமைகள் ஆகியவற்றை வைத்து கணக்கீட்டால், உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியா இருக்கும். ஆனால், தற்போது நாம் எதிர் வழியில் இருக்கிறோம். 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 1979ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.2 விழுக்காடு குறைவாக இருக்கும். சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில், இதுதான் மிக குறைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியாக இருக்கும்

Kaushik Basu
இந்திய பொருளாதார வளர்ச்சி

கேள்வி: மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி மதிப்புடைய பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்? இது பொருளாதாரத்திற்குத் தேவையான ஊக்குவிப்பை அளிக்குமா?

உண்மையைச் சொல்லப்போனால், ரூ.20 லட்சம் கோடி என்பது மிகப்பெரிய தொகை. இந்த அறிவிப்பால் நான் மகிழ்ச்சியடைந்தேன். சரியாகப் பயன்படுத்தினால், இதன் மூலம் நாம் நிறைய நன்மைகளைப் பெறலாம்.

கேள்வி: இந்தப் பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தில் ஏழைகளுக்குப் போதுமான மற்றும் நேரடி வருமானத்தை உறுதிசெய்யும் எவ்வித திட்டமும் இல்லை என்று விமர்சனம் வலுவாக உள்ளது. இதுகுறித்த உங்கள் கருத்து?

அது மிகச் சரியான விமர்சனம். இந்த நெருக்கடியான காலத்தில் ஏழைகளின் கைகளில் பணம் தருவதுதான் உடனடி தேவையாக உள்ளது. போர்க்காலத்திலும் இதுதான் செய்யப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக, இதுபோன்ற திட்டங்களை நாம் காண முடியவில்லை.

ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினேன். அதே நேரம், ​​போதுமான நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், இது வெறும் சில நாள் தலைப்புச் செய்தியாக மட்டுமே இருந்துவிடுமோ என்று நான் கவலைப்படுகிறேன்.

நமது பொருளாதாரம் இப்போது பெரும் பாதிப்பைச் சந்திப்பதற்கான ஒரு காரணம், நாம் தலைப்புச் செய்திகளாக வரும் சில அறிவிப்புகளை வெளியிடுகிறோம். ஆனால், அறிவிப்பிற்குப் பின் எவ்வித நடவடிக்கைகளையும் நாம் எடுப்பதில்லை.

இதையும் படிங்க: 'இயல்புநிலை திரும்ப வாய்பே இல்லை... நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிறது' - WHO

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.