ETV Bharat / bharat

இந்தியா-ஜப்பான் உறவு எந்த நாடுகளுக்கும் எதிரானது அல்ல - நிபுணர்கள் - இந்தியா ஜப்பான் உறவு

இந்தியா-ஜப்பான் உறவு அதில் சீனாவின் பங்கு குறித்து மூத்த செய்தியாளர் அரோனிம் பூயான் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

Modi
Modi
author img

By

Published : Aug 22, 2020, 3:30 AM IST

இந்தியா-ஜப்பான் நாடுகள் கூட்டுறவை மேம்படுத்தும் விதமாக அடுத்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் இருதரப்பு உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக இரு நாடுகளும் புதிய அணியை உருவாக்குவதாக சீனாவின் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, இரு நாடுளின் கூட்டுறவு எந்தவொரு நாடுகளுக்கும் எதிரான நோக்கில் ஏற்படுத்தப்படவில்லை என வெளியுறவுத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவின் முன்னணி ஆங்கில நாளிதழான குளோபல் டைம்ஸ்சில், சின்குவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை இயக்குநர் குவிங் பெங் “Hard for India, Japan to form a united front against China” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில், ஜப்பானை பயன்படுத்தி, சீனாவை இந்தியா முடக்க நினைத்தால் அந்தத் திட்டம் தோல்வியில் முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா சீனாவுக்கு இடையே எல்லையில் நடைபெற்ற மோதலை சுட்டிக்காட்டி இந்த கருத்தை அவர் கட்டுரையில் கூறியுள்ளார்.

மேலும் அந்த கட்டுரையில் அவர் கூறியதாவது, 'இரு தரப்பும் மோதலுக்கு பின், சீனாவுக்கு அழுத்தம் தர இந்தியா பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. டிக் டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. அத்துடன் சீனாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை இந்தியா தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.

ஆனால் இந்தியாவின் இந்த முயற்சிகள் அந்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு போதும் மேம்படுத்தாது. கரோனா பாதிப்பு காரணமாக இந்தியா கண்டுள்ள பொருளாதார பாதிப்பு தீவிரமானது. சீனாவை முடக்க நினைத்து இந்தியா செயல்பட்டால் அது இந்தியாவுக்குதான் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சீனாவை எதிர்க்கும் அளவிற்கு இந்தியாவிடம் போதுமான சக்தி இல்லை என்றார்.

அதே வேளை, இந்தியா-சீனா உறவு, சீனா-ஜப்பான் உறவை விட சீனா-அமெரிக்கா உறவு மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளதாக கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருபக்கம் சீனாவுக்கு அழுத்தம் தரும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டாலும், சிக்கலை தீர்க்கும் நோக்கில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அதேபோல் ஜப்பானும் சீனாவுடன் பொருளாதார நல்லுறவுக்காக சமரசத்தையே விரும்பும். எனவே இரு நாடுகளும் சீனாவுக்கு எதிராக அதிதீவிரப்போக்கை கடைபிடிக்கும் வாய்ப்புகள் குறைவு என்றுள்ளார்.

அத்துடன் சீனாவுடன் சச்சரவு இருந்தாலும், ஜப்பான் மற்றும் இந்தியா ஆசியாவின் வளர்ச்சிக்காக உறவை பலப்படுத்தவே விரும்பும் எனவும் தெரிவித்துள்ளார். ஆசியாவின் இரு பெரும் பொருளாதார சக்திகளான இந்தியா, ஜப்பானிடம் சீனா அமைதியை விரும்பி ஆசிய கண்டத்தின் வளர்ச்சியையே நிலைநிறுத்த முயற்சி செய்யும். தேவையற்ற அழுத்தங்கள் இந்தப் பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும் என்றார்.

இந்நிலையில் இந்தாண்டு ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இந்தியா இரு தரப்பு உச்சி மாநாடு மேற்கொள்ளவுள்ளன. குறிப்பாக செப்டம்பர் மாதம் மோடி, அபே ஆகியோர் பங்கேற்கவுள்ள உச்சி மாநாடு முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. கடந்தாண்டே இரு நாடுகளுக்கு இடையே உச்சி மாநாடு அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் நடைபெறவிருந்தது. அப்போது குடியுரியமை சட்ட திருத்தம் காரணமாக அங்கு போராட்டம் நடைபெற்றதால் இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த மாதம், இந்தியா-சீனா இடையே லடாக்கில் ஏற்பட்ட மோதலின் போது இந்திய ஆதரவு நிலைப்பாட்டை ஜப்பான் மேற்கொண்டது. இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் சந்தோஷி சுசுகி, எல்லையில் சீனாவின் அத்துமீறலை கடுமையாக எதிர்த்துள்ளதாக கூறியுள்ளார்.

குளோபல் டைம்ஸ் கட்டுரைக்கு பதில் தரும் விதமாக, வெளியுறவுத்துறை நிபுணர் கே.வி.கேசவன் பேசுகையில், 'இந்தியா-ஜப்பான் உறவு எந்தவொரு நாடுக்கும் எதிரானதாக இருக்காது. பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்ற போது இரு நாட்டு உறவும் உச்சம் தொட்டுவருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தென் சீனா கடல் பகுதியில் சீனா தொடர் அத்துமீறலை மேற்கொண்டுவருகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்' என்றார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில், இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலிரேலியா ஆகிய நாடுகள் சீனாவை கட்டுக்குள் வைக்க புது கூட்டணியை உருவாக்கியுள்ளது என்பதே உலக அரசியலில் குறிப்பிடத் தகுந்த நகர்வாகும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.