ETV Bharat / bharat

வெளிநாட்டு வர்த்தகத்திற்கு தடை? - மத்திய அமைச்சர் விளக்கம் - பியூஷ் கோயல்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள தற்சார்பு இந்தியா திட்டத்தால், எந்தவொரு வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் பாதிப்பு ஏற்படாது என்று மத்திய வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Piyush Goyal
Piyush Goyal
author img

By

Published : Jul 18, 2020, 4:07 PM IST

'கோவிட் பரவலின்போது இந்தியாவிற்கும் பிரான்சிற்குமான வணிக தொடர்ச்சி' என்ற தலைப்பில் காணொலிக்காட்சி வழியே நடைபெற்ற கூட்டத்தில் மத்திய வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "'தன்னிறைவு இந்தியா' திட்டத்தால் (ஆத்மநிர்பார் பாரத் அபியான்) சர்வதேச வர்த்தகத்திற்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது. இத்திட்டத்தால் சர்வதேச வர்த்தகத்திற்கு இந்தியா தடை எதையும் விதிக்கவில்லை.

மாறாக, இந்தியா மற்ற நாடுகளுடன் ஆழ்ந்த வர்த்தக உறவை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறது. சர்வதேச விநியோகச் சங்கிலியில் ஒரு முக்கிய பகுதியாக இருக்க விரும்புகிறோம். சர்வதேச வர்த்தகத்திற்கு நம்பகமான ஒரு பங்காளராகவே இந்தியா இருக்க விரும்புகிறது.

பிரான்சிற்கும் இந்தியாவிற்கும் இடையே எவ்வித போட்டியும் இல்லை, ஆனால் ஒருவருக்கொருவர் உதவிகளை செய்ய விரும்புகிறோம். காலத்திற்கு தேவையான மிக உயர்ந்த தொழில்நுட்ப தயாரிப்புகளை பிரான்ஸ் உருவாக்குகிறது.

அதேபோல இன்று பிரான்சில் உற்பத்தி செய்ய முடியாத பல தயாரிப்புகளை இந்தியா உற்பத்தி செய்கிறது. மருந்துகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் பகிர்ந்துகொள்ள நிறைய விஷயங்கள் உண்டு.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு கடந்த ஆண்டு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு இருதரப்பு வர்த்தகத்தை 15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு வைத்தோம். இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் ஒன்றாக பணிபுரியலாம், ஒருவருக்கொருவர் உதவி செய்யலாம்.

இந்த கோவிட்-19 பெருந்தொற்று அனைவருக்கும் தைரியமான, புதுமையான, விவேகமான, திறமையான, ஒரு வணிக செயல்முறைகளை உருவாக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: பெரியார் சிலை அவமதிப்பு - ராகுல் காந்தி தமிழில் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.