ETV Bharat / bharat

சீன எல்லையில் தயாராகும் சாலைகள்: அதிரடி காட்டும் இந்தியா - சீன எல்லையில் தயாராகும் சாலைகள்

டேராடூன்: சீன எல்லைப் பகுதியான தர்மா பள்ளத்தாக்கில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இந்தியா சாலைகளை அமைத்துவருகிறது.

சீன எல்லையில் தயாராகும் சாலைகள்
சீன எல்லையில் தயாராகும் சாலைகள்
author img

By

Published : Jun 25, 2020, 8:07 PM IST

இந்திய, சீன எல்லையில் தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இதன் தொடர்ச்சியாக, கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், சீன எல்லைப் பகுதியான தர்மா பள்ளத்தாக்கில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இந்தியா சாலைகளை அமைத்துவருகிறது.

எல்லைப் பகுதியைச் சுற்றியுள்ள 14 கிராமங்களில் சாலைக் கட்டமைப்புப் பணிகளை மத்தியப் பொதுப்பணித் துறை அலுவலர்கள் நிறைவுசெய்துள்ளனர். ஏற்கனவே, ஏழில் ஆறு மேம்பாலங்கள் கட்டப்பட்டுவிட்டன. இதன்மூலம், எல்லைப் பகுதிக்கு முன்பை விட குறைவான நேரத்தில் பாதுகாப்புப் படையினரால் செல்ல முடியும்.

லிபுலேக் முதல் வியாஸ் பள்ளத்தாக்கு வரையிலான பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த நிலையில், தர்மா பள்ளாத்தாக்கில் உள்ள தட்டு கிராமத்தில் கட்டமைப்புப் பணிகள் நிறைவுபெற்றுள்ளன. திபேத் தக்லாகோட் சந்தைக்கு அருகே இந்தச் சாலை அமைக்கப்படுவதால் வியூக ரீதியில் இந்தியாவுக்கு இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

எல்லையில் தயாராகும் சாலைகள்
எல்லையில் தயாராகும் சாலைகள்

இந்தப் பணிகளின்போது, இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இருப்பினும், சிறப்பாக சாலைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 'வன்புணர்வுக்குள்ளான பெண் இரவு தூங்கிவிட்டு காலையில் புகார் அளிப்பாரா?' - கர்நாடக உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.