ETV Bharat / bharat

கர்தார்பூர் சாஹிப் வழித்தட திறப்புவிழாவில் மன்மோகன் சிங் பங்கேற்பு? - கர்தார்பூர் சாஹிப் திறப்பு விழா மன்மோகன் சிங்

டெல்லி: கர்தார்பூர் சாஹிப் வழித்தட திறப்பு விழாவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் ஆகியோர் செல்ல உள்ளதாக அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

Manmohan
author img

By

Published : Oct 30, 2019, 2:03 AM IST

பாகிஸ்தானில் உள்ள தர்பார் சாஹிப்பையும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் கோயிலையும் இணைக்கும் வழித்தடம்தான் கர்தார்பூர் சாஹிப் வழித்தடம். இதன் வழியாக, இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப்புக்குச் சென்று அங்கு வழிபட முடியும். சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குரு நானக்கின் 550ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்த வழித்தடம் நவம்பர் 9ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

கர்தார்பூர் சாஹிப் வழித்தட திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாகிஸ்தான் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் விருந்தினராக கலந்து கொள்ள மாட்டார், ஆனால், யாத்திரிகராக கலந்து கொள்வார் என தகவல் வெளியானது. இதனால், அவர் திறப்பு விழாவில் கலந்து கொள்வாரா என குழப்பம் நிலவிவந்தது. இந்நிலையில், இந்தியா சார்பில் கர்தார்பூர் சாஹிப் வழித்தட திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் 575 பேர் கொண்ட பட்டியலை இந்தியா பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங், மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் பூரி ஆகியோர் அந்த பட்டிலில் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Intro:Body:

Govt sources: India has today shared list of 575 pilgrims to go in inaugural 'jatha' to Gurudwara Kartarpur Sahib through Kartarpur corridor. It includes ex-PM Manmohan Singh, Union Ministers Hardeep Puri, Harsimrat Kaur Badal, Punjab CM Amarinder Singh, Punjab's MPs-MLAs&others.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.