ETV Bharat / bharat

காஷ்மீர் விவகாரம்: சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்தியா - காஷ்மீர் விவகாரம்

டெல்லி: காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க சீனா கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

காஷ்மீர் விவகாரம்
காஷ்மீர் விவகாரம்
author img

By

Published : Aug 6, 2020, 6:30 PM IST

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரசியலாக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது. இதனிடையே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க சீனா கோரிக்கை விடுத்தது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த இந்தியா, தேவையில்லாத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் எனக் கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா கோரிக்கை விடுத்தது. இருப்பினும், இந்த முயற்சி தோல்வி அடைந்தது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் சீனாவின் தலையீட்டை இந்தியா முழுமையாக நிராகரிக்கிறது. ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க சீனா முயற்சி செய்து வருகிறது என்பதை அறிவோம்.

மற்ற நாட்டு விவகாரங்களில் சீனா தலையீடுவது முதல்முறை அல்ல. முன்பை போலவே, இம்முறையும் சர்வதேச நாடுகளின் ஆதரவு சீனாவுக்கு கிடைக்கவில்லை.

தேவையில்லாத முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என சீனாவைக் கேட்டு கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்குப் பிரச்னை இந்திய, சீன நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், காஷ்மீர் விவகாரத்தை சீனா மீண்டும் கையில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க: விகாஸ் தூபே என்கவுன்ட்டர்: விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.